டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனாவை தூக்கி சாப்பிட்டு விட்டது இந்தியா.. எதில் தெரியுமா?

புத்தாண்டு தினத்தில் குழந்தை பிறப்பு விகிதத்தில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    வருடத்தின் முதல் நாளில் அதிக குழந்தைகள் எங்கு பிறந்தது தெரியுமா?- வீடியோ

    டெல்லி: சீனாவையே தூக்கி சாப்பிட்டுவிட்டது இந்தியா!! எதில் தெரியுமா? வேற எதில? குழந்தை பிறக்கிறதுலதான்!!

    வருஷா வருஷம் புத்தாண்டு அன்று அதிகமாக குழந்தைகள் பிறக்கும் நாடு எது என்பதை யூனிசெப் அறிவிக்கும். யூனிசெப் என்பது ஐநாவில் உள்ள குழந்தைகளின் நலனுக்காக உள்ள அமைப்பு ஆகும்.

    இந்த அமைப்புதான், இந்த வருடமும் தனது கருத்து கணிப்பை தெரிவித்துள்ளது. அதன்படி புத்தாண்டில் அதிகமான குழந்தைகள் பிறந்த வகையில் இந்தியாதான் என்று கூறியுள்ளது.

    இந்தியா முதலிடம்

    இந்தியா முதலிடம்

    புத்தாண்டு அன்று அதிகமாக குழந்தைகள் பிறந்த நாடு இந்தியாதான் என்று போன வருஷம் யூனிசெப் தெரிவித்திருந்தது. இந்த வருஷமும் இந்தியா அதே முதலிடத்தை தக்க வைத்து கொண்டிருக்கிறதாம். 2019-ம் ஆண்டு துவங்கிய அன்றைய தினம், அதாவது நியூ இயர் அன்றைக்கு இந்தியாவில் மட்டும் 69,944 குழந்தைகள் பிறந்திருப்பதாக யுனிசெப் அறிவித்துள்ளது.

    சீனா இரண்டாவது

    சீனா இரண்டாவது

    அன்றைய தினம், உலக அளவில் 3,95,000 குழந்தைகள் பிறந்திருக்கிறது. இதற்கு அடுத்துதான், உலக மக்கள் தொகை அதிகம் என சொல்லப்படும் சீனாவே வருகிறது. சீனாவில் 44,940 குழந்தைகள் பிறந்திருக்கிறதாம். நைஜீரியாவில் 25,685 குழந்தைகளும், பாகிஸ்தானில் 15,112 குழந்தைகளும், இந்தோனேசியாவில் 13,256, அமெரிக்காவில் 11,860, வங்கதேசத்தில் 8,428 குழந்தைகளும் பிறந்துள்ளன.

    நியூயார்க் 317 குழந்தைகள்

    நியூயார்க் 317 குழந்தைகள்

    சரியாக 12 மணியை அடைந்தவுடன் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் மட்டும் 168 குழந்தைகள் பிறந்துள்ளன. இதேபோல, டோக்கியாவில் 310 குழந்தைகள், பெய்ஜிங்கில் 605 குழந்தைகள், நியூயார்க்கில் 317 குழந்தைகள் பிறந்துள்ளன.

    உலகின் முதல் குழந்தை

    உலகின் முதல் குழந்தை

    ஆனால் புத்தாண்டு பிறந்தவுடன் சரியாக 12 மணி அடித்தவுடன் உலகிலேயே முதல் குழந்தை பசிபிக்கில் உள்ள பிஜி நகரில் பிறந்தது என்று யூனிசெப் தெரிவித்துள்ளது. இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், சரியாக 12 மணி அடைந்தவுடன் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் மட்டும் 168 குழந்தைகள் பிறந்துவிட்டனவாம்!

    இறப்பு விகிதம்

    இறப்பு விகிதம்

    யுனிசெப் அமைப்பின் துணை நிர்வாக இயக்குநர் சார்லோட்டி பெட்ரி கோரிநிட்கா இதை பற்றி சொல்லும்போது, "உலகில் எத்தனையோ நாடுகளில் பிறக்கும் குழந்தைகள் தங்கள் முதல் நாளை நிறைவு செய்யமுடியாமல் கூட இறந்துவிடுகின்றன. போன வருஷம் உலக அளவில் 10 லட்சம் குழந்தைகள் பிறந்த நாள் அன்றே இறந்துவிட்டன. 25 லட்சம் குழந்தைகள் பிறந்த ஒரு மாசத்தில் இறந்துவிட்டன.

    சுகாதார பணியாளர்கள்

    சுகாதார பணியாளர்கள்

    இப்படி குழந்தைகள் இறக்க முக்கிய பிரச்சனைகள் என்னவென்று பார்த்தால், குறைபிரசவங்களும், பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்கள், தொற்றுக்கள்தான். அதனால் ஒவ்வொரு நாட்டிலும் உள்ளூர் சுகாதாரப் பணியாளர்களுக்கு சரியான டிரெயினிங் தருவதற்கு நாம் முதலீடு செய்தால் பல லட்சம் குழந்தைகளின் உயிர்களை நாம் காப்பாற்றலாம்" என்றார்.

    எப்படியோ இந்த வருஷமும் குழந்தைகள் பிறப்பில் இந்தியா முதலிடம் பெற்றுவிட்டது.. ஏதோ நம்மால முடிஞ்சது!!

    English summary
    Unisef says, On the First day of 2019 estimated, India may have welcomed Maximum New Borns
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X