டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழா.. இந்த குட்டி விஜபிக்கு மட்டுமே ஆத் ஆத்மி அழைப்பு!

Google Oneindia Tamil News

Recommended Video

    AAP invited Baby Mufflerman |கெஜ்ரிவால் பதவியேற்பு.. குட்டி குழந்தைக்கு அழைப்பு

    டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போன்று உடையணிந்து கவனம் ஈர்த்த குட்டி குழந்தையை, கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

    டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி 3வதுமுறையாக ஆட்சியை பிடித்துள்ளது. டெல்லியில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 70 இடங்களில் 62 இடங்களில் வென்று மிகப்பெரிய அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது.

    Baby Mufflerman is invited to the swearing in ceremony of Arvind Kejriwal on 16th Feb: AAP

    அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து மூன்றாவது முறையாக டெல்லி மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அவரது பதவி ஏற்பு விழா டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் வரும் 16 ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்த பதவியேற்பு விழாவில் எந்த மாநில முதல்வரையும், எந்த ஒரு அரசியல் கட்சி தலைவர்களையும் நாங்கள் அழைக்க மாட்டோம் என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக டெல்லி. மக்கள் முன்னிலையில் எளிமையாக பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளதை ஆம் ஆத்மி அறிவித்திருக்கிறது.

    இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போன்று உடையணிந்து கவனம் ஈர்த்த குட்டி குழந்தை அவரது பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்த தகவலை ஆம் ஆத்மி கட்சி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    பொதுவாக எந்த ஒரு அரசியல் கட்சியும் சட்டமன்ற தேர்தலை வெற்றி பெற்ால் பதவி ஏற்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்தும். அப்படி நடத்தும் விழாவில் பிரதமர், பல மாநில முதல்வர்கள், அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என பலருக்கும் அழைப்பு விடுக்கும். விழாவும் பெரும் செலவுடன் சீரும் சிறப்புமாக நடக்கும். ஆனால் ஆம் ஆத்மி வித்தியாசமாக விஐபிக்கள் யாரையும் அழைக்காமல் இந்த முறை கெஜ்ரிவாலின் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது.

    English summary
    AAP invited Baby Mufflerman for swearing in ceremony of Arvind Kejriwal on 16th Feb
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X