டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

50 வயது பெண் கூட்டு பலாத்காரம் நடந்தது ஏன்.. மகளிர் ஆணைய உறுப்பினர் சொன்னாரு பாருங்க காரணம்.. ஷாக்

Google Oneindia Tamil News

டெல்லி: உத்தர பிரதேசம் மாநிலம், படான் மாவட்டத்தில் ஒரு கோயில் பூசாரி மற்றும் இருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 50 வயது அங்கன்வாடி பெண் ஊழியரின் குடும்பத்தினரை சந்தித்து ஆலோசித்த கையோடு, தேசிய பெண்கள் ஆணையம் (என்.சி.டபிள்யூ) உறுப்பினர் சந்திரமுகி தேவி ஒரு சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட அந்த பெண் மாலையில் தனியாக வெளியே போகாமல் இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்று சந்திரமுகி கூறிய கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படான் மாவட்டத்தில் 50 வயதாகும் அங்கன்வாடி பெண் பணியாளர் கொடுமையான முறையில் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

வாட்ஸ்அப் பயனர்களுக்கு செக்.. டேட்டாவை ஷேர் செய்ய வேண்டும்.. அல்லது பயன்படுத்த முடியாதாம்!வாட்ஸ்அப் பயனர்களுக்கு செக்.. டேட்டாவை ஷேர் செய்ய வேண்டும்.. அல்லது பயன்படுத்த முடியாதாம்!

மகளிர் ஆணையம் விசாரணை

மகளிர் ஆணையம் விசாரணை

பிரேத பரிசோதனையின்போது அந்த 50 வயது பெண்ணின் பிறப்பு உறுப்பு கடுமையாக சேதமடைந்துள்ளது, நிறைய ரத்தம் வெளியேறி உள்ளது, கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

குடும்ப உறுப்பினர்கள்

குடும்ப உறுப்பினர்கள்

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரை சந்திக்க தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரான சந்திரமுகி தேவி, இன்று படான் சென்றடைந்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திப்பதற்கு முன்பு அவர் எஸ்.எஸ்.பி.யை சந்தித்து முழு விவரமும் கேட்டறிந்தார்.

வெளியே போயிருக்க கூடாது

வெளியே போயிருக்க கூடாது

பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை சந்தித்த பிறகு, சந்திரமுகி தேவி நிருபர்களிடம் கூறுகையில், இந்த சம்பவம் திட்டமிடப்பட்டதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணை தொலைபேசியில் அழைத்து வெளியே வரச் சொல்லியுள்ளனர். மாலை நேரத்தில் அந்த பெண் தனியாக சென்று இருக்க கூடாது. குடும்ப உறுப்பினர்களை தன்னுடன் அழைத்துச் சென்றிருக்கலாம். ஆனால் இதில் எதுவும் நடக்கவில்லை. தனியாக வெளியே போயுள்ளார். எனவேதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

போலீஸ் நடவடிக்கை

போலீஸ் நடவடிக்கை

இந்த கருத்து கடுமையாக கண்டனங்களை பெற்ற நிலையில், தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மாவும், சந்திரமுகி தேவியின் கருத்துக்கு உடன்படவில்லை. சந்திரமுகி மேலும் கூறுகையில், முழு வழக்கிலும் காவல்துறையின் அலட்சியம் தென்படுகிரது. காவல்துறை முதலிலேயே நடவடிக்கை எடுத்திருந்தால், பெண்ணின் உயிரும் காப்பாற்றப்பட்டிருக்கலாம். உகேதி போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நடந்து கொண்ட விதம் துரதிர்ஷ்டவசமானது, நாங்கள் போலீஸ் நடவடிக்கைகளில் திருப்தி அடையவில்லை. காவல்துறையினர் நினைத்திருந்தால் இந்த சம்பவத்தை தவிர்த்திருக்கலாம். முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆரம்பத்தில் இருந்தே இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
A National Commission for Women (NCW) member, said the rape incident may not have happened had the woman not ventured out alone in the evening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X