டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாய்னா நேவால் பாஜகவில் இணைந்தார்... தெலுங்கானாவில் புதிய பாய்ச்சலுடன் தயாராகும் பாஜக

Google Oneindia Tamil News

டெல்லி: பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் விரைவில் பாஜகவில் இணைந்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால். இவர் கடந்த 2012-ம் ஆண்டு, லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார். பேட்மிண்டன் போட்டிகளில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையும் இவர் தான் முதலில் படைத்தார்.

 Badminton Player Saina Nehwal to join BJP shortly

ஹைதராபாத்தைச் சேர்ந்த சாய்னா, தனது சக பேட்மின்டன் வீரர் பாருபள்ளி காஷ்யப்பை கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சாய்னாவின் திறமையை பாராட்டி அர்ஜுனா விருது, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் உள்பட பல விருதுகளை மத்திய அரசு வழங்கி உள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் கேல் ரத்னா விருதையும் சாய்னா வென்றுள்ளார்.

உலக அளவில் புகழ் பெற்ற பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தான் வசிக்கும் தெலுங்கானா மக்களாலும் மிகவும் நேசிக்கப்படும் நபராக திகழ்கிறார். இந்நிலையில் சாய்னா நேவால் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அதன் தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். சாய்னாவுடன் அவரது சகோதரி சந்த்ரன்சுவும் பாஜகவில் இணைந்தார்

தாமரையின் முகமாக மாறி உள்ள சாய்னா நேவால் தெலுங்கானாவில் பாஜகவில் வளர்ச்சிக்கு வெற்றிகரமாக நபராக இருக்கும் என பாஜக நம்புகிறது. தென்னிந்தியாவில் கர்நாடகாவில் கால் ஊற்றிவிட்ட பாஜக, அடுத்தாக தெலுங்கானாவை குறிவைத்து களம் இறங்கி உள்ளது. ஏற்கனகே அங்கு நடந்த 2019 லோக்சபா தேர்தலில் பாஜக நான்கு இடங்களில் வென்று அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறது..

Take a Poll

English summary
Badminton Player Saina Nehwal to join BJP shortly, she is living in hyderabad, may be get big port from bjp
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X