டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடடே.. சுட்டு கொல்லுங்கள் என்று சொன்ன அனுராக் தாக்கூரா இது.. இப்போ எப்படி பேசுகிறார் பாருங்களேன்

Google Oneindia Tamil News

டெல்லி: ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை என்றும், மக்கள் தங்கள் வாக்கு சக்தியை'' வாக்குச்சீட்டில் காட்டி தோட்டாக்களை வீழ்த்த வேண்டும் என்றும், நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் சமீபத்தில் பங்கேற்று பேசிய அனுராக் தாக்கூர், சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களை குறிவைத்து சர்ச்சை கருத்துக்களை தெரிவித்தார். துரோகிகளை சுட்டுக் கொல்ல வேண்டும் என அவர் பேசினார்.

Recommended Video

    டெல்லி ஷாகின் பாக்கில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராட்டம் நடத்தியோர் மீது துப்பாக்கிச் சூடு - வீடியோ

    இதன்பிறகுதான், டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது அடுத்தடுத்து 3 முறை துப்பாக்கிச்சூட்டில் சிலர் ஈடுபட்டனர். இதற்கு ஒரு வகையில் அனுராக் சர்ச்சை பேச்சு காரணம் என்று எதிர்க்கட்சிகள் தீவிர, பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

     சிஏஏ சட்டத்தை வாபஸ் பெறுக.. அமெரிக்காவின் சியாட்டில் நகரசபை அதிரடி தீர்மானம்.. சாதித்த தேன்மொழி சிஏஏ சட்டத்தை வாபஸ் பெறுக.. அமெரிக்காவின் சியாட்டில் நகரசபை அதிரடி தீர்மானம்.. சாதித்த தேன்மொழி

    வாக்களிப்பு

    வாக்களிப்பு

    நேற்று அனுராக் தாக்கூர் நாடாளுமன்றத்தில் பேசியபோது கூட, துப்பாக்கியால் சுடுவதை நிறுத்துங்கள் என எதிர்க்கட்சிகள் கோஷமிட்டு பரபரப்பை கிளப்பினர். ஆனால், அதே அனுராக் தூக்கூர்தான் இப்போது இப்படி பேசியுள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில் அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள்: "ஜனநாயகத்தில், வன்முறைக்கு இடமில்லை. வாக்களிக்கும் சக்தி சரியான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும், வாக்குச்சீட்டுதான், தோட்டாக்களின் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.

    பலர் சேர்க்கை

    பலர் சேர்க்கை

    டெல்லியில் சட்டமன்றத் தேர்தலை ஒத்திவைக்க பாஜக விரும்புகிறது. எனவேதான் வன்முறை பேச்சுக்களை கட்டவிழ்த்து விடுகிறது என்ற குற்றச்சாட்டை மறுத்தார் தாக்கூர். "நாங்கள் தேர்தல்களை ஒத்திவைக்க விரும்பினால், இன்று ஏராளமான ஆம் ஆத்மி தலைவர்கள் பாஜகவில் இணைந்திருக்க மாட்டார்கள். நாங்கள் வளர்ச்சி பணிகளில் வேகத்தோடு இருப்பதால் பாஜகவில் சேர்ந்துள்ளனர். " என்று அவர் விளக்கம் அளித்தார்.

    ஆம் ஆத்மி மீது குற்றச்சாட்டு

    ஆம் ஆத்மி மீது குற்றச்சாட்டு

    டெல்லி குடிமக்களுக்கு குடிநீர் வழங்கத் தவறிவிட்டதாகவும், மெட்ரோவை 5 ஆண்டுகள் தாமதப்படுத்தியதாகவும் ஆம் ஆத்மி ஆட்சியை அனுராக் தாக்கூர் விமர்சித்தார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களுக்கு, பிரியாணி உணவளிப்பதை கெஜ்ரிவால் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    தேர்தல்

    தேர்தல்

    டெல்லியின் 70 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக, வாக்குப்பதிவு பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11 ஆம் தேதி நடைபெறும். இங்கு ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. பல கருத்துக்கணிப்புகளும், ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்று கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    "In a democracy, there is no place for violence. The voting power shall be used in the right manner and ballot should dominate bullets," said Anurag Thakur Thakur while speaking to ANI.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X