பிஸ்கெட், குக்கீஸ்களுக்கு தடை.. சுகாதாரத்துறை அமைச்சக கூட்டங்களில் உலர் பழங்கள் வழங்க உத்தரவு
டெல்லி: மத்திய சுகாதாரத்துறை சாா்பில் நடத்தப்படும் அலுவல் கூட்டங்களின் போது பிஸ்கெட், குக்கீஸ் போன்ற துரித நொறுக்கு தீனிகளை வழங்க போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
"ஆரோக்கியமான உணவை" நோக்கிச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பாக நடைபெறும் அதிகாரப்பூர்வ துறை ரீதியான கூட்டங்களின் போது பிஸ்கெட், குக்கீஸ் மிக்ஸர் போன்ற நொறுக்கு தீனிகளை வழங்க போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது

அதற்கு பதிலாக பேரிச்சை போன்ற உலர் பழங்கள், பாதாம் மற்றும் அக்ரூட் பருப்பு வகைகள் வழங்கப்பட வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகம் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது
ஜூன் 19/ம் தேதி இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றைஅனுப்பியுள்ளது அதில், சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தொடர்பான அதிகாரப்பூர்வ கூட்டங்களில் பிஸ்கெட், குக்கீஸ் போன்ற உடலுக்கு தீங்கு தரும் துரித உணவுகளை இனி வழங்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது
2021 தேர்தலில் ரஜினிக்கும் ஸ்டாலினுக்கும்தான் நேரடி போட்டி.. அதிமுக என்னவாகுமோ?- கராத்தே தியாகராஜன்
இந்த உத்தரவு சுகாதாரத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து துறைகளிலும் உடனடியாக அமலுக்கு வருகிறது என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பிஸ்கெட் மற்றும் குக்கீஸ்கள் உள்ளிட்டவற்றிற்கு பதில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் உலர் பழங்கள், கொண்டைக்கடலை, பாதாம் பருப்பு போன்ற நட்ஸ் வகைகளை மட்டுமே வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார துறை உத்தரவு குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சக அதிகாரிகள் இந்த நடவடிக்கையால் தங்களுக்குமகிழ்ச்சியே என குறிப்பிட்டுள்ளனர். மேலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஒரு மருத்துவர் என்பதால், துரித உணவுகள் மற்றும் நொறுக்கு தீனிகள் உடலுக்கு எவ்வாறான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதை அவர் நன்கு அறிவார்.
அதனால்தான் எங்களது உடல்நலனை கருத்தில் கொண்டு அவர் இது போன்ற நல்ல நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார். அவரது இந்த உத்தரவை சுகாதார துறை அமைச்சகத்தின் அனைத்து ஊழியர்களும் மனப்பூர்வமாக வரவேற்பதாக கூறியுள்ளனர்,
மேலும் அரசு கூட்டங்களின் போது உடலுக்கு கேடு விளைவிக்கும் நொறுக்கு தீனிகளை சுகாதாரத்துறை கட் செய்திருப்பது, மற்ற துறை அமைச்சகங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.