டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மார்ச் 2வது வாரத்தில் வங்கிகள் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறையா? .. பரபரப்பு தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் மார்ச் 11, 12, 13 ஆகிய மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர் அடுத்த இரண்டு நாட்கள் சனி மற்றும் ஞாயிறு என்பதால் தொடர்ந்து ஐந்து நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் தங்களுக்கு 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். ஆனால் வங்கிகள் நிர்வாகம், 12.25% க்கு மேல் செல்ல தயாராக இல்லை. இதேபோல் வாரத்திற்கு 5 நாள் வேலை வாரம், சிறப்பு ஊதியத்தை அடிப்படை ஊதியத்துடன் இணைத்தல், புதிய ஓய்வூதிய திட்டத்தை நீக்குதல் போன்றவை பிற கோரிக்கைகளை எழுப்பி வருகிறார்கள். ஆனால் இந்த கோரிக்கைகளை ஏற்க வங்கிகள் நிர்வாகங்கள் மறுத்துவிட்டன.

இதனால் வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் கடந்த ஜனவரி 31ம் தேதி மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் போராட்டங்களை நடத்தினர். இதனால் வங்கி சேவைகள் மூன்று நாட்கள் பாதிக்கப்பட்டது.

முடங்கபோகுது

முடங்கபோகுது

இந்நிலையில் தங்கள் கோரிக்கைகளை ஏற்க மறுப்பதால், மீண்டும் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். வழக்கமாக இரண்டு நாள் அல்லது மூன்று நாள் வேலை நிறுத்தம் அறிவிப்பார்கள். அதன்படியே இந்த முறையும் 3 நாள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். ஆனால் வங்கிகள் ஐந்து நாட்கள் இயங்காமல் முடங்கும் நிலை ஏற்பட போகிறது.

சேவை பாதிப்பு

சேவை பாதிப்பு

எப்படி என்றால் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ள மார்ச் 11, 12, 13 ஆகிய மூன்று நாட்கள் என்பத புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள் ஆகும். மேலும் மார்ச் 14 ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை நாள் ஆகும். அதேபோல் மார்ச் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் மொத்தமாக 5 நாட்கள் வங்கிகள் இயங்காத நிலை ஏற்படும்.

வங்கிகள் லீவு

வங்கிகள் லீவு

தொடர்ந்து . ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை ஏற்பட்டால் வங்கி வாடிக்கையாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். வங்கி பரிவர்த்தனைகள் கோடிக்கணக்கில் முடங்கும் நிலை ஏற்படலாம். சும்மாவே சனி ஞாயிறுகளில் ஏடிஎம்களில் பணத்தை பார்ப்பது அரிதான விஷயமாக உள்ளது. இந்த நிலையில் ஐந்து நாள் விடுமுறை என்றால் சொல்லவே வேண்டாம். மிக மோசமான பாதிப்பு ஏற்படும். ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணியும் இருக்காது. என்பதால் பெரும்பாலான ஏ.டி.எம்கள் காலியாக இருக்கவும் வாய்ப்புள்ளது . எனவே வங்கி வாடிக்கையாளர்கள் தேவையான பணத்தை ஏடிஎம்களில் முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. அதேபோல் அத்தியாவசியமான பரிவர்த்தனைகளை வேலை நிறுத்த நாட்களுக்கு முன்பே முடித்துவிடுங்கள்.

தீர்வு வருமா

தீர்வு வருமா

வங்கிகள் வேலை நிறுத்ததை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மற்றும் வங்கிகள் நிர்வாக சங்கம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஒருவேளை தீர்வு ஏற்பட்டால் வேலை நிறுத்தம் கைவிடப்படலாம். மாறாக வழக்கம் போல் பேச்சுவார்த்தை தோற்றால் 10 லட்சம் வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் இறங்குவது உறுதியாகி விடும். இது பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது.

English summary
Bank employees’ unions call for three-day nationwide bank strike in March 11, 12, 13. five day banks works may affected
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X