டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விற்பனையை அதிகரிக்க வியூகம்.. கார், வீடுகள் விலை குறைகிறது.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    வரி சலுகைகள்.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு-வீடியோ

    டெல்லி: கார் மற்றும் வீடுகளின் விலை குறையப்போகிறது. இதுதொடர்பான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார்.

    பொருளாதார சரிவு பிரச்சினைக்கு நடுவே, டெல்லியில் இன்று மாலை நிருபர்களை, சந்தித்த நிர்மலா சீதாராமன கூறியதாவது:

    தொழில்துறைக்கான மூலதன நிதி திரட்டும் முறைகள் எளிதாக்கப்படும். பொதுத்துறை வங்கிகளின் மூலதன ஊக்கத்திற்காக ரூ.70000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    நேரடி பலன்

    நேரடி பலன்

    ரிசர்வ் வங்கி வட்டிக்குறைப்பு மூலம் மக்கள் உடனடியாக பலன் பெற நடவடிக்கை. அதாவது, ரேபோ விகிதம் குறைக்கப்பட்ட உடன் இஎம்ஐ உடனடியாக குறைக்கப்படும். வீட்டுக்கடன், ஆட்டோமொபைல் கடன் மீதான வட்டி உடனடியாக குறைக்கப்படும். ரிசர்வ் வங்கி வட்டிக்குறைப்பு மூலம் மக்கள் உடனடியாக பலன் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்

    ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்

    இனிமேல், வெறும், 30 நாட்களில் சிறு வணிகங்களுக்கு செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி பண நிலுவையை திருப்பித் தர உள்ளோம். சிறு, குறு தொழில் தொடங்க எளிதாக கடன் வழங்கப்படும். ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான ஏஞ்சல் வரி திரும்பப் பெறப்பட்டுகிறது. கடன் திரும்ப செலுத்தப்பட்ட 15 நாட்களுக்குள் வாடிக்கையாளர்களின் ஆவணங்கள் திருப்பித் தரப்படும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

    வாகன விற்பனை சரிவு

    வாகன விற்பனை சரிவு

    பொருளாதாரச் சரிவு காரணமாக, இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. பயணிகள் வாகனங்கள், அதாவது கார் இருசக்கர வாகனங்கள் போன்றவை தவிர்த்து, சரக்கு வாகனங்கள் வாங்குவதற்கும் வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக மாருதி சுசுகி முதல் அசோக் லேலண்ட் நிறுவனம் வரை பெரும் சிக்கலில் மாட்டியுள்ளது. தள்ளுபடி விலையில் வாகனங்களை விற்பனை செய்வதில் அவர்கள் மும்முரமாக உள்ளனர். உற்பத்தி ஸ்தம்பித்து உள்ளதால் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்கள் வேலை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

    ரியல் எஸ்டேட் கடும் சரிவு

    ரியல் எஸ்டேட் கடும் சரிவு

    இதே போன்று தான் ரியல் எஸ்டேட் தொழிலிலும் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் அதற்கு முந்தைய ஆண்டின் அதே காலகட்டத்தில் ஒப்பிட்டால் 43 சதவீதம் அளவுக்கு வீடுகளின் விற்பனை சரிவடைந்து இருந்தது. இந்த நிலையில்தான் கார் மற்றும் வீட்டு கடன் மீதான வட்டியை வங்கிகள் குறைக்க உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்துள்ளது அந்த துறைகளுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புது ரத்தம்

    புது ரத்தம்

    இந்த அறிவிப்பின் மூலமாக வாகனங்கள் விற்பனை மற்றும் ரியல் எஸ்டேட் வர்த்தகம் அதிகரித்தால் கண்டிப்பாக பொருளாதாரத்திற்கு அது புது ரத்தம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

    English summary
    Banks to make home loan, auto loan cheaper & repo rate linked products, says Nirmala Sitharaman.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X