டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இது வெறும் தொடக்கம்தான்.. சீனாவின் டேட்டா அஸ்திரத்தை நொறுக்கிய இந்தியா.. மோடியின் ஸ்மார்ட் மூவ்!

Google Oneindia Tamil News

டெல்லி: சீனாவின் 59 செயலிகளை மத்திய அரசு தடை செய்து இருப்பது சீனாவிற்கு வைக்கப்பட்டு இருக்கும் முதல் செக்காக பார்க்கப்படுகிறது.

Recommended Video

    59 Chinese appsக்கு தடை..மத்திய அரசு அதிரடி

    டிக்டாக் - TikTok, ஷேர் இட்- Shareit, யுசி பிரவுசர் - UC Browser, ஹெலோ - Helo, எம்ஐ கம்யூனிட்டி - Mi Community, செண்டர் - Xender உள்ளிட்ட 59 செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டு இருக்கிறது. தடை செய்யப்பட அனைத்து செயலிகளும் சீனாவை சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

    சீனாவிற்கு இது பெரிய அதிர்ச்சியாக மாறியுள்ளது. லடாக் சண்டை நிலவி வரும் நிலையில் இப்படி சீனாவின் செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளது. சீனாவிற்கு எதிரான இந்தியாவின் ஸ்மார்ட் மூவ் இது என்று கூறுகிறார்கள்.

    டிக்டாக், யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை.. மத்திய அரசு அதிரடி.. பரபரப்பு! டிக்டாக், யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை.. மத்திய அரசு அதிரடி.. பரபரப்பு!

    பல கோடி ரூபாய்

    பல கோடி ரூபாய்

    இப்படி செயலிகளை தடை செய்ததன் மூலம் சீனாவில் பலகோடி இழப்பு ஏற்பட போகிறது. உதாரணமாக டிக்டாக் என்ற செயலி மட்டுமே 100 கோடி பயனாளர்களை உலகம் முழுக்க கொண்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 50 கோடிக்கும் அதிகமான கணக்குகள் இதில் உள்ளது. தடை காரணமாக இந்த வருமானம் இன்னும் சில நாட்களில் டிக்டாக்கிற்கு இல்லாமல் போகும். இதேபோல் ஷேர் இட் தொடங்கி ஹலோ வரை எல்லா செயலிகளும் மிக மோசமான பொருளாதார சரிவை சந்திக்கும்.

    சீனாவின் மாபெரும் சந்தை

    சீனாவின் மாபெரும் சந்தை

    அந்த செயலிகள் மட்டுமின்றி சீனாவின் மொத்த ஜிடிபியும் இதனால் பாதிக்கும். சீனா தனது வருமானத்திற்காக தொழிநுட்ப செயலிகளை பெரிய அளவில் நம்பி இருக்கிறது. அந்த நாட்டின் ஜிடிபியில் இது நான்காவது பெரிய பங்களிப்பை தருகிறது. அதிலும் இந்தியாவின் 100 கோடி பயனாளிகள் சீனாவிற்கு மிக முக்கியமான சந்தையாக உள்ளது. இவர்கள் சீன செயலிகளை புறக்கணித்தால், அந்த நாட்டில் வளர்ந்து வரும் ஒரு துறையே மொத்தமாக காலியாகும் நிலைமை ஏற்படும்.

    மற்ற நாடுகள் இதை செய்யும்

    மற்ற நாடுகள் இதை செய்யும்

    இன்னொரு பக்கம் இந்தியா போன்ற பெரிய நாடு சீனாவின் செயலிகளை தடை செய்தால் மற்ற நாடுகளும் சீனாவின் செயலிகளை தடை செய்ய முன் வரும். சீனா மீது ஏற்கனவே அமெரிக்கா கோபத்தில் இருக்கிறது. இதனால் அமெரிக்காவும் கூட சீனாவின் செயலிகளை தடை செய்யலாம். ஏற்கனவே தனது தேர்தல் பிரச்சாரம் டிக்டாக் மூலம் நாசமாகிவிட்டதாக டிரம்ப் கோபத்தில் இருக்கிறார்.

    டிரம்ப் கோபம்

    டிரம்ப் கோபம்

    அங்கு அதிபர் டிரம்பிற்கு எதிராக டிக்டாக்கில் சீனர்கள் தொடங்கி பலர் மிக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதனால் அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் டிக் டாக் செயலுக்கு தடை விதிக்கலாம். அதேபோல் ஆஸ்திரேலியாவில் சீன ஹேக்கர்கள் அடுத்தடுத்து ஹேக்கிங் செய்ததும் பெரிய பிரச்சனையாக உள்ளது. இதனால் ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளும் சீனாவின் சந்தை மீது கடும் கோபத்தில் இருக்கிறது.

    டேட்டாக்களை திருட முடியாது

    டேட்டாக்களை திருட முடியாது

    இன்னொரு பக்கம் சீனா இந்திய மக்களின் டேட்டாக்களை திருட முடியாது. இந்தியர்களை டேட்டாக்களை வைத்துதான் இந்திய சந்தையில் தொடர்ந்து சீனா பொருட்களை விற்று வருகிறது. சந்தையை விரிவுபடுத்தி வருகிறது. இது போன்ற செயலிகள் மூலம்தான் இப்படி சீனா தொடர்ந்து இந்தியாவில் டேட்டாக்களை பெற்று சந்தையை விரிவாக்குகிறது. தற்போது அந்த அஸ்திரத்தை இந்தியா உடைத்துள்ளது.

    ஹேக்கிங் எப்படி

    ஹேக்கிங் எப்படி

    அதேபோல் இது போன்ற டேட்டாக்களை வைத்துதான் உலகின் பிற நாடுகளில் ஹேக்கிங் வேலைகளை செய்து வருகிறது. இதை இந்தியா தடுத்துள்ளது. உலகம் முழுக்க இப்படி சீனா தனது செயலிகளை விரிவுபடுத்தி உள்ளது. ஆனால் சீனாவிற்குள் மற்ற நாடுகளின் செயலிகளுக்கு அனுமதி இல்லை. சந்தை என்பது இரட்டை வழியை கொண்டதாக இருக்க வேண்டும். பிற நாட்டில் செயலிகளை விடுவேன், என் நாட்டிற்குள் விட மாட்டேன் என்றுகூறுவது முழுக்க முழுக்க தவறானது. இதனால் சீனாவின் செயலிகளை தடை செய்தது சரியான முடிவு என்கிறார்கள்.

    இந்திய ஆயுத ரீதியாக மட்டுமின்றி

    இந்திய ஆயுத ரீதியாக மட்டுமின்றி

    ஒரு நாட்டுக்கு எதிரான போர் என்பது ஆயுதங்களை மட்டும் ஏந்திக்கொண்டு செல்லும் போர் கிடையாது. அது வர்த்தக ரீதியாகவும் செய்யப்படலாம். அதேபோல் இப்படி டெக்கினிக்கல் ரீதியாகவும் செய்யப்படலாம். இந்தியா ஆயுதம் இல்லாமலும் மிக மோசமாக தாக்கும் என்று இதன் மூலம் நிரூபித்து இருக்கிறது. சீனாவிற்கு கண்டிப்பாக இது பொருளாதார ரீதியாக பெரிய தாக்குதலாக இருக்கும் என்கிறார்கள்.

    English summary
    Banning Chinese apps by India is on of the biggest move against Beijing and its politics.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X