டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சரியான போட்டி.. இந்தியாவில் முதலீடுகளை குவிக்கும் பேஸ்புக், கூகுள், அமேசான்.. ஜியோ, ஏர்டெலுக்கு லக்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவை சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, வோடாபோன் - ஐடியா ஆகிய நிறுவனங்களில் அமெரிக்காவை சேர்ந்த அமேசான், பேஸ்புக், கூகுள் ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்ய உள்ளது. இது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இடையே புதிய போட்டியை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    Reliance plans to explore a potential public listing in the United States in 2021.

    கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட வர்த்தக மோதலை தொடர்ந்து சீனாவில் இருந்து பெரிய நிறுவனங்கள் வெளியேற தொடங்கி உள்ளது. முக்கியமாக சீனாவில் இருக்கும் அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் இருந்து முதலீடுகளை வெளியே எடுக்க தொடங்கிவிட்டது.

    சீனா அமெரிக்கா இடையே நிலவி வரும் மோதலும் இதற்கு காரணம் ஆகும். இந்த அமெரிக்க நிறுவனங்கள் எல்லாம் இந்தியாவில் வேகமாக முதலீடு செய்ய தொடங்கி உள்ளது. முக்கியமாக இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்ய தொடங்கி உள்ளது.

    வேகமெடுக்கும் கொரோனா.. ஜூலை 15க்குள் சென்னையில் 1.5 லட்சம் பாதிப்பு.. எம்ஜிஆர் பல்கலை ஆய்வறிக்கை வேகமெடுக்கும் கொரோனா.. ஜூலை 15க்குள் சென்னையில் 1.5 லட்சம் பாதிப்பு.. எம்ஜிஆர் பல்கலை ஆய்வறிக்கை

    ஜியோ முதலீடு

    ஜியோ முதலீடு

    இந்த முதலீட்டு டிரெண்ட் உருவானது பேஸ்புக்கில் இருந்துதான். பேஸ்புக் நிறுவனம்தான் இந்தியாவில் லாக்டவுனுக்கு இடையே திடீர் என்றது ரிலையன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய தொடங்கியது.ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான ஜியோவில் பேஸ்புக் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. அப்போதே ஜியோவின் மதிப்பு பெரிய அளவில் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. 43,574 கோடி ரூபாயை முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தில் பேஸ்புக் முதலீடு செய்துள்ளது.

    அதிக மதிப்பு

    அதிக மதிப்பு

    இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-இன் டெலிகாம் கீழ் வரும் ஜியோ நிறுவனத்தின் 9.99 சதவீத பங்குகளைப் பேஸ்புக் கட்டுப்பாட்டிற்கு கொண்டு உள்ளது. இந்தியாவில் ஆன்லைன் மார்கெட்டிங்கில் களமிறங்க வேண்டும் என்று பேஸ்புக் - ஜியோ ஒன்றாக இணைந்துள்ளது. அதன்பின் வரிசையாக நிறைய விஸ்டா ஈக்யூட்டி பார்ட்னர், ஜெனரல் அட்லாண்டிக் உள்ளிட்ட நிறைய அமெரிக்க நிறுவனங்கள் ஜியோவில் முதலீடு செய்தது.

    போட்டி

    போட்டி

    இதனால் ஜூயோவின் மதிப்பு வேகமாக சந்தையில் உயர தொடங்கியது. வரிசையாக இப்படி முதலீடு காரணமாக ஜியோ உலக அளவில் வைரலானது. இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள மற்ற நிறுவனங்கள், இந்தியாவில் இருக்கும் மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் மீது கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. ஏர்டெல் மற்றும் வோடபோன் - ஐடியா மீது முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.

    கூகுள் வோடாபோன்

    கூகுள் வோடாபோன்

    இந்த நிலையில் கூகுள் நிறுவனம் இந்தியாவில் உள்ள வோடபோன் - ஐடியா மீது முதலீடு செய்ய திட்டமிட்டு வருவதாக கூறுகிறார்கள். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. வோடபோன் - ஐடியா இதுகுறித்து மௌனம் சாதித்து வருகிறது. கூகுள் இந்திய தொலைத்தொடர்பு துறையில் குதிக்க பல காலமாக முயன்று வருகிறது. ஏற்கனவே கூகுள் ஏர்டெல் நிறுவனம் உடன் நெருக்கமாக இருந்தது.

    வோடபோன் - ஐடியா

    வோடபோன் - ஐடியா

    ஆனால் ஏர்டெல் நிறுவனத்தில் கூகுள் முதலீடு செய்யவில்லை. தற்போது வோடபோன் - ஐடியா நிறுவனத்தில் முதலீடு செய்ய கூகுள் முடிவு செய்துள்ளது என்கிறார்கள். வோடபோன் - ஐடியா நிறுவனத்தின் கடன் 1.05 லட்சம் கோடியாக உள்ளது. இந்த நிலையில் வோடபோன் - ஐடியா நிறுவனத்தில் கூகுள் நிறுவனம் முதலீடு செய்தால் அது பெரிய அளவில் அந்த நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏர்டெல் எப்படி

    ஏர்டெல் எப்படி

    இதற்கு இடையில் புதிய திருப்பமாக ஏர்டெல் நிறுவனத்தில் அமெரிக்காவின் அமேசான் நிறுவனம் 2 பில்லியன் டாலர் முதலீடு செய்ய போவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதன்படி மொத்தம் ஏர்டெல் நிறுவனத்தின் 5% பங்குகளை அமேசான் நிறுவனம் வாங்க போகிறது என்று கூறுகிறார்கள். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் இந்த முதலீடு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

    கடும் போட்டி

    கடும் போட்டி

    ஏற்கனவே ஏர்டெல், ஜியோ, வோடாபோன் - ஐடியா இடையே கடுமையான போட்டி இந்தியாவில் நிலவி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் மூன்று முக்கிய நிறுவனங்களான அமேசான், பேஸ்புக், கூகுள் இந்த மூன்று நிறுவனங்களிலும் முதலீடு செய்ய உள்ளது.இதனால் இந்த மூன்று நிறுவனங்களும் பெரிய அளவில் வளர்ச்சி அடையும். இந்த மாபெரும் சந்தை போட்டி இந்திய தொலைத்தொடர்பு துறையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

    English summary
    Battle between Amazon, Facebook and Google: Investment in Airtel, Jio and Vodafone - Idea groups.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X