டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லடாக்கை உரிமை கொண்டாடும் சீனா... கட்டிடங்கள் கட்டுவதற்கு எதிர்ப்பு... மீண்டும் பீஜிங் சண்டித்தனம்!!

Google Oneindia Tamil News

டெல்லி: லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக அறிவித்து இருப்பதை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம். லடாக்கில் சட்டத்திற்கு விரோதமாக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதையும் அங்கீகரிக்க மாட்டோம் என்று சீனா தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலடி கொடுத்து இருக்கும் இந்தியா, ''சீனா கூறுவதை நாங்கள் ஏற்க மாட்டோம். 1959ல் கூறியதைதான் தற்போதும் சீனா கூறி வருகிறது. அப்போதும் நாங்கள் இதை இந்தியா ஏற்கவில்லை. தற்போதும் நாங்கள் இதை ஏற்கவில்லை'' என்று பதிலடி கொடுத்துள்ளது.

படை வாபஸ்

படை வாபஸ்

மாஸ்கோவில் இருதரப்புக்கும் இடையே ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்ததைக்கு பின்னர் இந்த மோதல் வெடித்துள்ளது. சீனாவுக்கு உட்பட்ட மால்டோ பகுதியில் கடந்த வாரம் எல்லையில் இருதரப்பிலும் படைகளை வாபஸ் பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது இருதப்பிலுமே முதலில் நீங்கள் படைகளை வாபஸ் வாங்குங்கள் என்று பரஸ்பரமாக குற்றம்சாட்டிக் கொண்டனர். எந்த முடிவையும் எட்டவில்லை.

சாலை

சாலை

இந்த நிலையில்தான், சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் அவர்களிடம் செய்தியாளர்கள் லடாக் ஒட்டிய எல்லையில் இந்தியா சாலை அமைத்து வருவது குறித்து கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு பதில் அளித்த வாங், ''லடாக் பகுதியை இந்தியா யூனியன் பிரதேசமாக உருவாக்கி இருப்பதை நாங்கள் அங்கீகரிக்கவில்லை. சர்ச்சைக்குரிய எல்லையில் கட்டிடங்கள் கட்டுவதையும் நாங்கள் ஏற்கவில்லை. ராணுவ கட்டுப்பாட்டு நோக்கத்திற்காக கட்டி வருவதை நாங்கள் ஏற்கவில்லை.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

தற்போதைய சீனா, இந்தியா ஒருமித்த பேச்சுவார்த்தையின்படி எல்லையில் எந்த ஒரு நடவடிக்கைகளிலும் இருதரப்பும் ஈடுபடக் கூடாது. இது அமைதியை குலைக்கும் என்று கூறப்பட்டு இருந்தது. அமைதியை உருவாக்குவதற்கு இருதரப்பினரும் முயற்சிக்க வேண்டும்'' என்று தெரிவித்து இருந்தார்,.

இறையாண்மை

இறையாண்மை

இப்போது மட்டுமில்லை, லடாக் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையிலும், சீனா கடுமையான ஆட்சேபனை தெரிவித்து இருந்தது. இந்த அறிவிப்பு அந்த பிராந்தியத்தின் இறையாண்மையை குறைக்கிறது என்றும், எல்லைக்கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் விவேகத்துடன் செயல்பட வேண்டும் என்றும் சீனா தெரிவித்து இருந்தது.

நிலைப்பாடு

நிலைப்பாடு

இதற்கு முன்பு பதிலடி கொடுத்து இருந்த இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, ''1959ஆம் ஆண்டில் சீனா கொண்டு வந்திருக்கும் எல்லைக் கட்டுப்பாடு கோட்டை இந்தியா ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. இதுகுறித்து பேசுவதற்கு சீனா மறுத்து வருகிறது. இந்தியா ஒருபோதும் எல்லையில் அத்துமீறலில் ஈடுபடவில்லை. தொடர்ந்து சீனாதான் எல்லையில் பல இடங்களை ஆக்கிரமித்துள்ளது. இதன் மூலம் எல்லை நிலைப்பாட்டை மாற்றி வருகிறது'' என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில்தான் சீனா மீண்டும் லடாக் எல்லை பிரச்னையை கையில் தூக்கியுள்ளது.

உரிமை

உரிமை

லடாக் விஷயத்தில் சீனா தலையிட்டபோதும், ஐநாவில் எழுப்ப முயற்சித்தபோதும் இந்தியா சரியான பதிலடி கொடுத்து இருந்தது. இந்திய இறையாண்மை விஷயத்தில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று இந்தியா எச்சரிக்கை விடுத்து இருந்தது. ஆனாலும், தொடர்ந்து லடாக் விஷயத்தில் சீனா குறியாக இருந்து வருகிறது.

நேரு

நேரு

கடந்த 1959ஆம் ஆண்டில் அப்போது சீனாவின் அதிபராக இருந்த ஜாவ் அன்லை தனக்குத் தானாக ஒரு எல்லைக் கட்டுப்பட்டு கோட்டை இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே ஏற்படுத்தி அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவுக்கு அனுப்பி இருந்தார்.

முட்டாள்

முட்டாள்

இந்த எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை அப்போது ஏற்பதற்கு நேரு மறுத்துவிட்டார். நேருவுக்கு கடிதம் எழுதினார் சீன அதிபராக இருந்த ஜாவ் அன்லை. இதற்கு பதில் அளித்து இருந்த நேரு, ''செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து ஆக்கிரமிப்பில் சீனா ஈடுபட்டு உருவாக்கிய எல்லை இதுதானா? அப்பட்டமான ராணுவ ஆக்கிரமிப்பால் நாற்பது அல்லது அறுபது கிலோமீட்டர் தூரத்திற்கு முன்னேறுதல் மற்றும் இருபது கிலோ மீட்டர் எல்லையை மீண்டும் அபகரிக்க முன்னேறுவது ஏமாற்று வேலை. யாரையும் முட்டாளாக்க முடியாது'' என்று பதில் அளித்து இருந்தார்.

English summary
Beijing rejects Ladakh UT and raises 1959 claim line
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X