டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'பாரத் பந்த்'.. வேளாண் மசோதாவை எதிர்த்து வீதிக்கு வந்த விவசாயிகள்.. இன்று என்னவெல்லாம் நடக்கும்!

Google Oneindia Tamil News

டெல்லி: வேளாண் மசோதாவை எதிர்த்து விவசாயிகள் நாடு முழுவதும் 'பாரத் பந்த்' போராட்டம் இன்று நடத்துகிறார்கள். இந்தியாவின் பல பகுதிகளில் சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து முடங்க வாய்ப்பு உள்ளது.

ஹரியானா, பஞ்சாப், உ.பி உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் விவசாயிகள் தலைநகர் டெல்லியை எல்லா பக்கத்திலும் இருந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளது.

விவசாயிகள் அமைப்புகள் அறிவித்துள்ள இன்றைய பாரத் பந்த் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. அத்துடன் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யூ.சி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களும் ஆதரவு அளித்துள்ளன.

விவசாயிகள் திட்டம்

விவசாயிகள் திட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விவசாய சீர்திருத்த சட்டங்களுக்கு எதிராக இன்று விவசாயிகள் சங்கங்கள் 'பாரத் பந்த்' அறிவித்துள்ளன. இந்தியாவின் பல பகுதிகளில் நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் தடங்களில் போக்குவரத்து தடைசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியின் அண்டை மாநிலமான ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் எதிர்ப்புக்கள் அதிகமாக உள்ளதால், விவசாயிகள் அங்கிருந்து மொத்தமாக வந்து டெல்லியை சுற்றி வளைக்க வாய்ப்புள்ளது. இதனால் அவர்களை தடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

18 கட்சிகள் ஆதரவு

18 கட்சிகள் ஆதரவு

அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு (AIKSCC), அகில இந்திய கிசான் மகாசங் (AIKM) மற்றும் பாரதிய கிசான் யூனியன் (BKU) ஆகியவை நாடு தழுவிய இந்த பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, இடது, திரிணாமுல் காங்கிரஸ், திமுக மற்றும் டிஆர்எஸ் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளன. அத்துடன் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யூ.சி மற்றும் ஹிந்த் மஜ்தூர் சபா போன்ற 10 மத்திய தொழிற்சங்கங்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கி ஒற்றுமையைக் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில்கள் மறியல்

ரயில்கள் மறியல்

விவசாயிகளின் 'ரஸ்தா ரோகோ' மற்றும் 'ரெயில் ரோகோ' போராட்டங்கள் பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தக்கூடும். வேலைநிறுத்தத்தின் அதிகபட்ச தாக்கத்தை விவசாய மாநிலங்கள் தாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய விவசாய சீர்திருத்தங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) முறையை ரத்து செய்யும் என்று விவசாயிகள் அஞ்சுவதால் போராட்டம் நடத்துகிறார்கள்.

எஃப்.ஐ.ஆர் போடப்படாது

எஃப்.ஐ.ஆர் போடப்படாது

பஞ்சாபில் போராட்டத்திற்கு தலைமை தாங்கும் கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் கமிட்டி (கே.எம்.எஸ்.சி) 'ரெயில் ரோகோ'வுக்கு அழைப்பு விடுத்துள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கவும், கோவிட் -19 பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றவும் முதல்வர் அமரீந்தர் சிங் விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். எனினும் 144 தடை உத்தரவை மீறியதற்காக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாது என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ஆம் ஆத்மி ஆதரவு

ஆம் ஆத்மி ஆதரவு

ஆளும் ஆம் ஆத்மி கட்சியும் (ஆம் ஆத்மி) காங்கிரசும் போராட்டத்தை ஆதரிக்கின்றன. டெல்லி-என்.சி.ஆர் எல்லைகளில் ஆர்ப்பாட்டங்களுக்கு உழவர் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

விவசாயிகள் ஆதரவு

விவசாயிகள் ஆதரவு

உத்தரபிரதேசத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் கிராமங்கள், நகரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளைத் தடுக்குமாறு பி.கே.யூ அழைப்பு விடுத்துள்ளது. போராட்டக்காரர்களுக்கு உள்ளூர் வர்த்தக அமைப்புகளிடமிருந்தும் ஆதரவு கிடைத்துள்ளது.

வங்கத்தில் போராட்டம்

வங்கத்தில் போராட்டம்

இடதுசாரிகளுடன் இணைந்த அகில இந்திய கிசான் சபா (AIKS) பல இடங்களில் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளைத் தடுப்பதன் மூலம் வங்காளத்தில் "வெகுஜன எதிர்ப்பை" பதிவு செய்ய முடிவு செய்துள்ளது. விவசாயத் தொழிலாளர்கள், , குறு விவசாயிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் ஆகியோரின் சுயாதீன தொழிற்சங்கமான பாசிம் பங்கா கெத் மஸ்டூர் சமிதியும் பந்திற்கு ஆதரவளித்து வருகிறது.

போராட்டம் எப்படி

போராட்டம் எப்படி

மகாராஷ்டிராவின் மிகப்பெரிய விவசாயிகள் குழுக்களில் ஒன்றான AIKS, மாநிலத்தில் 3,00,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது, இது 21 மாவட்டங்களில் போராட்டங்களை நடத்துகிறது. சம்யுக்த கர்ஷக சமிதி (எஸ்.கே.எஸ்) கேரளா முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு வெளியே போராட்டங்களை நடத்தும். தொழிற்சங்கத் தலைவர்களின் கூற்றுப்படி 250 மையங்களில் போராட்டங்கள் நடத்தப்படும்.

Recommended Video

    கோவையில் புதிய வேளாண் மசோதாவை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராட்டம் - வீடியோ
    விவசாயிகள் ஆதரவு

    விவசாயிகள் ஆதரவு

    தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள விவசாயிகள் அமைப்புகள் பந்திற்கு ஆதரவாக முன்வந்துள்ளன. டாக்ஸி மற்றும் லாரி ஓட்டுநர் சங்கங்களும் விவசாயிகளுக்கு ஆதரவளித்துள்ளன.

    English summary
    Bharat Bandh: Farmer organisations across India are expected to block highways, stage 'Rasta Roko' and 'Rail Roko' agitations in different parts of the country in protest against the Centre's three agriculture-related bills passed in Parliament earlier this month.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X