டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்று பாரத் பந்த்.. அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம்

Google Oneindia Tamil News

டெல்லி: அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு இன்று ஒரு நாள் பாரத் பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராகவும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிகளை மறுஆய்வு செய்யக் கோரியும் நாடு முழுவதும் கடைகளை அடைத்து வணிகர்கள் பந்த் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

பல்வேறு காரணங்களுக்காக விவசாயிகள், போக்குவரத்து தொழிற்சங்கங்கள், வணிகர்கள் இணைந்து நாடுதழுவிய பந்த் போராட்டததிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

Bharat Bandh : Transporters, Traders, Farmers Unions to Protests Against Fuel Price Hike, GST

அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல், விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய ஈ-வே மசோதா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிகளை மறுஆய்வு செய்ய வேண்டும். வெளிநாட்டு இ-காமர்ஸ் நிறுவனங்களின் அத்து மீறலைத் தடுக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு பாரத் பந்த் போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் உள்ள வணிக மார்க்கெட்டுகள் இன்று மூடப்படுகின்றன.

இந்த பந்த் போராட்டத்திற்கு அகில இந்திய போக்குவரத்து நலச் சங்கம் மற்றும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

பரவும் புதிய கொரோனா வகைகள்... 15 நாட்களில் தடுப்பூசி ரெடி.. பாரத் பயோடெக் அதிரடிபரவும் புதிய கொரோனா வகைகள்... 15 நாட்களில் தடுப்பூசி ரெடி.. பாரத் பயோடெக் அதிரடி

அனைத்து மாநிலங்களிலும் உள்ள போக்குவரத்து அமைப்புகள் இன்று பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளதாக வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவாக காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை வாகனங்களை நிறுத்திவைத்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுத்தி உள்ளது.

English summary
Bharat Bandh : Transporters, Traders, Farmers Unions to Protests Against rising fuel prices and the scrapping of new E-way bill laws introduced by Government of India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X