டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிராக்டர் ஓட்டியவர்கள் பாமரர்கள்.. திசை மாறி செங்கோட்டை சென்று திரும்பிட்டாங்க.. விவசாய சங்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: டிராக்டர் பேரணியில் கலந்து கொண்ட விவசாயிகள் படிப்பறிவில்லாத பாமரர்கள், அவர்கள் வழிதெரியாமல் டெல்லிக்குள் சென்றுவிட்டனர் என விவசாய சங்க பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி நுழைவு வாயிலில் லட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க குடியரசுத் தினவிழா அன்று மாபெரும் டிராக்டர் பேரணியை அமைதியாக நடத்த திட்டமிட்டார்கள்.

72 ஆவது குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. நேற்று காலை டிராக்டர் பேரணியை விவசாயிகள் தொடங்கினர். அப்போது யாரோ சில விஷமிகளின் சதியால் பேரணியில் வன்முறையை தூண்டும் வகையில் சில காரியங்களை செய்ததால் போலீஸார் விவசாயிகளின் மீது கண்ணீர் புகை குண்டு வீசி தடியடி நடத்தினர்.

டெல்லி விவசாயிகள்

டெல்லி விவசாயிகள்

இந்த நிலையில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியின் 4 நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அடித்து தள்ளிவிட்டு நுழைந்தனர். அவர்கள் செங்கோட்டையை முற்றுகையிட்டனர். அங்கு தேசியக் கொடியின் அருகே விவசாய சங்க கொடியையும் ஏற்றினர்.

டெல்லிக்கு எப்படி

டெல்லிக்கு எப்படி

இந்த பேரணியில் நடந்தது என்ன என்பது குறித்து பாரத் கிஷான் சங்க தலைவர் ராகேஷ் மிகவும் அழகாக விளக்கியுள்ளார். அவர் கூறுகையில் டிராக்டரை ஓட்டிச் சென்றவர்கள் படிப்பறிவில்லாத பாமர மக்கள். அவர்களுக்கு டெல்லிக்கு எப்படி போக வேண்டும் என்பது கூட தெரியாது.

செங்கோட்டை

செங்கோட்டை

டெல்லிக்கு எப்படி போக வேண்டும் என்பதை அங்கிருந்த அதிகாரிகள், காவல்துறை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகம்தான் கூறியது. இதன் பேரில் அவர்கள் டெல்லிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி விட்டார்கள். சிலர் செங்கோட்டைக்கு திசை திருப்பிவிடப்பட்டுவிட்டார்கள்.

பத்திரமாக வெளியே வந்த விவசாயிகள்

பின்னர் எப்படி வெளியே வர வேண்டும் என்பதை டெல்லி போலீஸார் வழிகாட்டியதன் பேரில் அவர்கள் திரும்பி வந்துவிட்டனர் என்றார். அதாவது வழித்தெரியாமல் போனார்கள், போலீஸார் கூறுவதை கேட்டு திரும்பி வந்துவிட்டார்கள், மற்றபடி வன்முறையில் இறங்கியது விவசாயிகள் இல்லை என்பது இவரது கூற்றிலிருந்து புரிகிறது.

English summary
Bharat Kisan Union President Rakesh Tikait says that uneducated people were driving tractors they didnt know the paths of Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X