டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரணாப் முகர்ஜி, பூபன் ஹசாரிகா, நானாஜி தேஷ்முக்-குக்கு பாரத ரத்னா விருது

டெல்லி முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல மறைவுக்குப் பிந்தைய பாரத ரத்னா விருதுக்கு நானாஜி தேஷ்முக் மற்றும் பூபன் ஹசாரிகா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். குடியரசுத் தலைவர் மாளிகை இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Bharat Ratna award for Pranab Mukherjee, Nanaji Deshmukh, Bhupen Hazarika

நானாஜி தேஷ்முக் மறைந்த ஜனசங்க தலைவர் ஆவார். ஜனசங்கம்தான் பின்னர் பாஜகவாக மாறியது என்பது நினைவிருக்கலாம். பூபன் ஹசாரிகா மிகச் சிறந்த கவிஞர் ஆவார். இருவருக்கும் மறைவுக்குப் பின்னர் பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.

எம்பி டூ குடியரசுத் தலைவர்.. அனைத்து உச்சங்களையும் கண்ட பிரணாப் முகர்ஜி எம்பி டூ குடியரசுத் தலைவர்.. அனைத்து உச்சங்களையும் கண்ட பிரணாப் முகர்ஜி

பிரதமர் மோடி வாழ்த்து

பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில், பிரணாப் முகர்ஜி மிகச் சிறந்த தலைவர். சுயநலமற்றும், தன்னலமற்றும் நாட்டுக்காக பல வருடங்கள் சேவையாற்றியவர் பிரணாப் முகர்ஜி. நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டவர். அவரது ஞானமும், அனுபவமும் ஒப்பிட முடியாதது. அவருக்கு பாரத ரத்னா விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது என்று அவர் கூறியுள்ளார்.

இதேபோல நானாஜி தேஷ்முக் மற்றும் பூபன் ஹசாரிகா ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டிருப்பது குறித்தும் பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது

நானாஜி தேஷ்முக், கிராமப்புற வளர்ச்சிக்காக மிகச் சிறப்பாக பாடுபட்டவர். கிராமப்புற வாழ்க்கைக்கு புதிய உத்வேகம், எழுச்சி கிடைக்க பாதை வகுத்தவர். மனிதாபிமானம் அதிகம் கொண்டவர், ஏழைகள் மீது அனுதாபம் கொண்டவர், ஒடுக்கப்பட்டோருக்காக உழைத்தவர். அவருக்கு மிகச் சரியான முறையில் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.

பூபன் ஹசாரிகாவின் பாடல்களும், இசையும், லட்சக்கணக்கான மக்களால் விரும்பிக் கேட்கப்படுபவை. பல தலைமுறைகளாக கேட்கப்படுபவை. சகோதரத்துவம், நல்லிணக்கம், சமூக நீதி ஆகிய செய்திகளைத் தாங்கி நிற்பவை ஹசாரிகாவின் கவிதைள். இந்திய இசையின் பாரம்பரியத்தை உலகெங்கும் கொண்டு சென்றவர் ஹசாரிகா. அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது என்று மோடி கூறியுள்ளார்.

English summary
Rashtrapati Bhavan has announced that Bharat Ratna award has been announced for Nanaji Deshmukh (posthumously), Dr Bhupen Hazarika (posthumously), and former President Dr Pranab Mukherjee.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X