டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடேங்கப்பா பாஜக.. நெட்பிளிக்ஸை பின்னுக்குத் தள்ளியது.. விளம்பரம் செய்வதில் நம்பர் 1!

Google Oneindia Tamil News

Recommended Video

    நாடு முழுவதும் விளம்பரம் செய்வதில் பாஜக தான் முதலிடம்

    டெல்லி: இது சும்மா டிரெய்லர் தான் ! மெயின் பிக்சரை இன்னும் பார்க்கல நீங்க... என்ற ரீதியில் நெட்பிளிக்ஸைவிட இரண்டு மடங்கு அதிகப்படியான விளம்பரங்களை டிவி சேனல்களுக்கு கொடுத்து, இந்தியாவின் நம்பர் ஒன் விளம்பரதாரர் என்ற இடத்தை பாஜக பிடித்துள்ளது.

    ஐந்து மாநில தேர்தலுக்கே ஒரு வாரத்தில் மட்டும் 22,099 முறை விளம்பரம் பாரதிய ஜனதா கட்சி கொடுத்திருக்கிறது என்றால், நாடாளுமன்ற தேர்தலுக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை.

    டிவி சேனல்களில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்கள் தொடர்பாக நவம்பர் 10 முதல் 16ம் தேதி வரையிலான பார்க் (BARC) தகவலின் படி அதிக விளம்பரங்களை கொடுப்பதில் பாஜக முதல் இடத்தில் உள்ளது.

    பாஜக நம்பர் ஒன்

    பாஜக நம்பர் ஒன்

    உலகின் மிகப்பெரிய வெப் சீரியஸ் நிறுவனமான நெட்பிளிக்ஸ், 1,2951 முறை விளம்பரம் கொடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது. 12,795 முறை விளம்பரம் கொடுத்து ட்ரிவகோ மூன்றாவது இடத்தில் உள்ளது.

    டாப் 10 விளம்பரங்கள்

    டாப் 10 விளம்பரங்கள்

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஐந்து மாநிலங்களில் தேர்தலையொட்டி பாரதிய ஜனதா கட்சி, டிவி சேனல்களுக்கு மிகஅதிகப்படியான விளம்பரம் கொடுத்து முதல் இடத்தை பிடித்துள்ளது.

    காங்கிரஸ் இல்லை

    காங்கிரஸ் இல்லை

    அதிக விளம்பரங்கள் கொடுத்த டாப் 10 பட்டியலில் காங்கிரஸ் கட்சி இடம் பெறவில்லை. பாரதிய ஜனதா கட்சி ஐந்து மாநில தேர்தலுக்கே ஒரு வாரத்தில் மட்டும் 22,099 முறை விளம்பரம் கொடுத்திருக்கிறது என்றால், நாடாளுமன்ற தேர்தலுக்கு எப்படி இருக்குமோ, கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

    நாடாளுமன்ற தேர்தலில் பாஜக

    நாடாளுமன்ற தேர்தலில் பாஜக

    கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சோஷியல் மீடியாவில் தொடங்கி, டிவி சேனல் வரை அத்தனையிலும், பாஜக விளம்பரத்துக்காக பல ஆயிரம் கோடி செலவிட்டது என்பது அனைவரது பேச்சு. எனவே வரப்போகும் நாடாளுன்ற தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு விளம்பரங்களுக்காக பாஜக செலவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாஜக விளம்பரம்

    பாஜக விளம்பரம்

    பொதுவாகவே, தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பப்படும் விளம்பரங்கள் பெரும்பாலான மக்களை சென்றடையும் என்பதால், பொருட்களை விற்பனை செய்யும், கார்பரேட் நிறுவனங்கள் தொலைக்காட்சிகளில் அடிக்கடி விளம்பரங்களை ஒளிப்பரப்புகின்றன. அதே உத்தியே தான் பாஜக பின்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

    English summary
    According to the latest Broadcast Audience Research Council (BARC) data, The Bharatiya Janata Party became the number one advertiser on television in the run-up to assembly elections in five states.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X