டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவிற்கு பெருமை... வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சீரம் தடுப்பூசி

Google Oneindia Tamil News

டெல்லி: சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி முதல்கட்டமாகப் பூட்டான் மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    இந்தா பிடிங்க… கொரோனா தடுப்பூசிகள்.. அண்டை நாடுகளுக்கு ‘கை’ கொடுக்கும் இந்தியா..!

    இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    Bhutan, Maldives First Countries To Receive Covid Vaccines From India

    ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்களின் தடுப்பூசியை கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு இந்தத் தடுப்பூசியை உற்பத்தி செய்து, விநியோகிக்கும் பொறுப்பு சீரம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

    சீரம் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு பல்வேறு நாடுகளும் தற்போது ஒப்புதல் அளித்து வருகின்றன. அதன்படி தற்போது முதல்கட்டமாகப் பூட்டான் மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து தடுப்பூசிகளைப் பெறும் முதல் நாடு என்ற பெருமையை இந்நாடுகள் பெற்றுள்ளது.

    60 நாடுகளில் உருமாறிய கொரோனா... தடுப்பூசி வேலை செய்யுமா... உலக சுகாதார அமைப்பு பகீர் தகவல்60 நாடுகளில் உருமாறிய கொரோனா... தடுப்பூசி வேலை செய்யுமா... உலக சுகாதார அமைப்பு பகீர் தகவல்

    பூட்டான் நாட்டிற்கு கோவிஷீல்டு தடுப்பூசியின் 1.50 லட்சம் டோஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதேபோல மாலத்தீவிற்கு ஒரு லட்சம் டோஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இது தொடர்பான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர், நட்பின் வெளிப்பாடாக இது அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    ஒழுங்குமுறை ஆணையங்களின் அனுமதிக்குப் பிறகு மிக விரைவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், மொரீஷியஸ் நாடுகளுக்கும் தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. உலகிலேயே இந்தியாவில்தான் மருந்துகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, கொரோனா தடுப்பூசி உற்பத்தியிலும் விநியோகத்திலும் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Bhutan and Maldives on Wednesday became the first two countries to receive COVID-19 vaccines sent by India in sync with its "neighbourhood first" policy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X