டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பீகார் சட்டசபை தேர்தலில் 16.6 லட்சம்... இடம் பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்கலாம்!!

Google Oneindia Tamil News

டெல்லி: பீகார் மாநிலத்தில் அக்டோபர் மாத மத்தியில் சட்டசபை தேர்தல் நடைபெறும். 16.6 லட்சம் இடம் பெயர் தொழிலாளர்கள் பீகார் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

பீகார் மாநில சட்டசபை தேர்தல் குறித்து இன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ''பீகார் தேர்தலில் 18.87 லட்சம் விவசாயிகள் வாக்களிப்பார்கள். மொத்தம் இருக்கும் 234 தொகுதிகளில் 38 தொகுதிகள் ரிசர்வ்டு தொகுதிகளாக இருக்கும். இரண்டு தொகுதிகள் எஸ்டிக்கு ஒதுக்கப்படும். 6 லட்சம் பிபிஇ கிட்கள், 47 லட்சம் மாஸ்க்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Bihar assembly election 2020: 16.6 lakh migrants have eligible to poll

பீகாரில் மொத்தம் 18.87 லட்சம் இடம் பெயர் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் 16.6 லட்சம் தொழிலாளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். வாக்கு செலுத்துவதற்கு வசதியாக ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை வாக்குகள் செலுத்தலாம். முன்பு இது மாலை 5 மணி வரை என்று இருந்தது. இந்த நேர நீட்டிப்பு மாவோயிஸ்ட்களால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பொருந்தாது.

ஆன் லைன் வாயிலாக தேர்தலுக்கான டெபாசிட் தொகையை செலுத்தலாம். ஆன் லைன் மூலம் விண்ணப்பித்து அதற்கான நகலை எடுத்து பின்னர் ஆர்ஓவிடம் சமர்பிக்கலாம்.

பீகார் மாநில தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. முதல் கட்டமாக அக்டோபர் 28ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 3ஆம் தேதியும் மூன்றாம் கட்ட தேர்தல் நவம்பர் 7ஆம் தேதியும் நடைபெறுகிறது.

முதல் கட்ட வேட்புமனு தாக்கல் அக்டோபர் 8ஆம் தேதி துவங்குகிறது. அக்டோபர் 12ஆம் தேதி வேட்புமனு வாபஸ் பெறலாம். தேர்தல் அக்டோபர் 28ஆம் தேதி நடைபெறுகிறது.

இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 16ஆம் தேதி நடைபெறுகிறது. அக்டோபர் 19ஆம் தேதி வாபஸ் பெறலாம். தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறுகிறது.

சர்ச்சையே உன்பெயர்தானா பாண்டே?விஆர்எஸ் கேட்ட உடனே கிடைச்சிருச்சு-பீகார் மாஜி டிஜிபியின் அரசியல் லீலைசர்ச்சையே உன்பெயர்தானா பாண்டே?விஆர்எஸ் கேட்ட உடனே கிடைச்சிருச்சு-பீகார் மாஜி டிஜிபியின் அரசியல் லீலை

மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 20ஆம் தேதி தொடங்குகிறது. அக்டோபர் 23ஆம் தேதி வாபஸ் பெறலாம். தேர்தல் தேதி நவம்பர் 7ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்குகள் எண்ணிக்கை நவம்பர் 10ஆம் தேதி நடைபெறுகிறது.

முதல் கட்டத்தில் 71 தொகுதிகளிலும், இரண்டாவது கட்டத்தில் 94 தொகுதிகளிலும், மூன்றாம் கட்டமாக 78 தொகுதிகளிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Bihar assembly election 2020: 16.6 lakh migrants have eligible to poll
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X