டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகாருக்கு சுக்கிர திசை...நேற்று ரூ. 900 கோடி அறிவிப்பு... இன்று எய்ம்ஸ்க்கு அமைச்சரவை அனுமதி!!

Google Oneindia Tamil News

டெல்லி: சட்டசபை தேர்தலை எதிர்கொண்டு இருக்கும் பீகார் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை இன்று அனுமதி அளித்துள்ளது. தர்பாங்கா என்ற இடத்தில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருக்கிறது.

மத்திய அமைச்சரவை அனுமதி அளித்த நாளில் இருந்து 48 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை ரூ. 1264 கோடியில் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 எம்பிபிஎஸ் மற்றும் 60 பிஎஸ்சி நர்சிங் இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை 750 படுக்கைகள் கொண்டதாக இருக்கும். பிரதம மந்திரி ஸ்வத்யா சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Bihar assembly election 2020: Central Cabinet approved AIIMS for Bihar

தினமும் இந்த மருத்துவமனையில் 2000 நோயாளிகள் வெளிப்புற நோயாளிகளாக சிகிச்சை பெறலாம். இங்கு பிஜி மற்றும் டிம்/எம்.சிஹெச் ஆகியவற்றுக்கான சிறப்பு பயிற்சிகள் இங்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் நடப்பாண்டு இறுதிக்குள் தேர்தல் நடக்கவிருக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த மாநிலத்தில் ரூ. 900 கோடி அளவிலான பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசுகையில், ''பீகார் மாநிலம் நாட்டின் அறிவுசார் மக்களின் மையமாக இருக்கிறது. பீகார் இளைஞர்களின் தாக்கம் செல்வாக்கு அனைத்து இடங்களிலும் பரவிக் கிடக்கிறது. நீங்கள் எந்த ஐஐடிக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் அங்கு பீகார் இளைஞர்கள் புத்திசாலிகளாக இருப்பார்கள்.

நீங்கள் எந்த மாநிலத்துக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் அங்கு பீகார் மக்களின் உழைப்பு இருக்கும், முன்னேற்றம் இருக்கும், ஊழியர்களின் பாராட்டத்தக்க வேலைகள் இருக்கும்.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்கள்-7.5% உள் ஒதுக்கீடு தரும் மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றம்மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்கள்-7.5% உள் ஒதுக்கீடு தரும் மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றம்

பீகார் மாநிலத்தை முதல்வர் நிதிஷ் குமார் பெரிய அளவில் மாற்றியுள்ளார். அரசாங்கத்தால் துவங்கப்பட்டு இருக்கும் பணி 15 ஆண்டுகளுக்கு முன்பு முடிக்கப்படும் என்று யாரும் நினைத்து கூட பார்த்து இருக்க மாட்டார்கள். ஆனால், இதை இன்று நிதிஷ் குமார் மாற்றியுள்ளார்.

மாநிலத்தில் அனைத்து எரிவாயு பொருள் சம்மந்தமான அனைத்துப் பணிகளையும் மத்திய அரசு நிறைவேற்றும். விரைவான வளர்ச்சியில் பீகார் நம்பிக்கை கொண்டுள்ளது'' என்றார்.

பீகாரில் பிரதிப்-ஹல்தியா- துர்காபூர் பெட்ரோலியம் பைப் லைன் திட்டம், எல்ஜிபி சிலிண்டர் தொழிற்சாலை திட்டம் ஆகியவற்றை பிரதமர் துவக்கி வைத்தார். மத்திய பெட்ரோலியம் இயற்கை எரிவாயுவின் கீழ் வரும் இந்தியன் ஆயில் மற்றும் ஹெச்பிசிஎல் நிறுவனங்களால் இந்த திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன.

English summary
Bihar assembly election 2020: Cabinet approved AIIMS for Bihar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X