டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகார் சட்டசபை தேர்தல்...பிரச்சாரத்துக்கு ஓகே.. ஆன்லைன் விண்ணப்பம்... தேர்தல் ஆணையம் வெளியீடு!!

Google Oneindia Tamil News

டெல்லி: பீகார் சட்டசபை தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் நிலையில், இன்று தேர்தல் நடத்தை வழிகாட்டு விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு கையுறை, மாஸ்க், சானிடைசர் வழங்கப்படும். பெற்றோருடன் வரும் குழந்தைகளுக்கு பிபிஇ கிட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    KAMALA HARRIS இப்படி பட்டவங்களா ! | UNTOLD STORY | ONEINDIA TAMIL

    பீகார் மாநில சட்டசபை தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடக்கவிருக்கிறது. இன்னும் மூன்று மாதங்கள் இருக்கிறது. தேர்தல் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பிரதமர் மோடி வெர்சுவல் முறையில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கியுள்ளார். இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    Bihar assembly election 2020: New rules issued by election commission of india

    அதில், ''வாக்கு மையத்திற்கு வரும் அனைத்து வாக்காளர்களும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்படுவார்கள். கொரோனா அறிகுறி இருந்தால் வாக்கு மையத்திற்குள் அனுமதிக்கபட மாட்டார்கள். ஆன் லைன் மூலம்தான் வேட்பாளர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இது சமூக இடைவெளி மற்றும் தனிமனித இடைவெளியை பாதுகாக்கும். வேட்பாளர்களை ஆதரித்து செலுத்தும் பணத்தையும், ஆன் லைனில் செலுத்த வேண்டும்.

    தேர்தல் பிரச்சாரத்துக்கு அனுமதிக்கப்படும். ஆனால், மத்திய உள்துறை அளித்திருக்கும் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டே அனுமதி அளிக்கப்படும். வேட்பாளர்களுடன் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்ய வேண்டுமானால், வேட்பாளருடன் சேர்த்து ஐந்து பேர்தான் செல்ல வேண்டும் போன்ற விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

    டீயில் பாய்சன்.. 4வது முறையாக கொலை முயற்சி.. ரஷ்யாவில் புடினே பார்த்து நடுங்கும் ஒரு நபர்.. பின்னணி!டீயில் பாய்சன்.. 4வது முறையாக கொலை முயற்சி.. ரஷ்யாவில் புடினே பார்த்து நடுங்கும் ஒரு நபர்.. பின்னணி!

    கண்காணிப்பில் இருக்கும் கொரோனா நோயாளிகளும் இறுதி நேரத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். அவர்களது பூத்துக்கு சென்றுதான் வாக்களிக்க வேண்டும். சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் இது நடைமுறைப்படுத்தப்படும். பூத்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்கப்படும்.

    பீகாரில் கொரோனாவுக்கு 1.15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 574 பேர் உயிரிழந்துள்ளனர். பீகார் சட்டசபையின் காலக்கெடு வரும் நவம்பர் 29ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. எனவே, அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் அந்த மாநிலத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    English summary
    Bihar assembly election 2020: New rules issued by election commission of india
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X