டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தனித்து விடப்படுவோம்.. வாய்ஸ் இல்லாத நிதிஷுக்கு முதல்வர் பதவியை தருவது ஏன்? அமித் ஷாவின் ராஜதந்திரம்

Google Oneindia Tamil News

டெல்லி: பீகார் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பெரிய அளவில் வெற்றிகளை குவிக்கவில்லை என்றாலும் கூட நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவியை கொடுக்க பாஜக முடிவு செய்துள்ளது. பாஜகவின் இந்த திட்டத்திற்கு பின் மேற்கு வங்க தேர்தலும் , 2024 லோக்சபா தேர்தலும் முக்கிய காரணம் என்று கூறுகிறார்கள்.

பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரிய வெற்றிபெற்றுள்ளது. பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 125 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை என்ற நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளது.

காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி வெறும் 110 இடங்களில் வென்று உள்ளது. இந்த தேர்தலில் பாஜக அதிக வெற்றிபெற்று இருந்தாலும் கூட, நிதிஷ் குமார்தான் முதல்வர் என்று பாஜக அறிவித்துள்ளது.

மோசம்

மோசம்

பீகாரில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 125 இடங்களில் வென்று இருந்தாலும் ஐக்கிய ஜனதா தளம் குறைவான இடங்களில்தான் வென்று உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும்தான் வென்று இருக்கிறது. 1995க்கு பின் நிதிஷ் குமாரின் கட்சி மிக மோசமாக ஒரு தேர்தலில் செயல்பட்டுள்ளது.

எப்படி

எப்படி

1995ல் இவரின் சமதா கட்சி வெறும் 7 இடங்களில் வென்றது. அதன்பின் நிதிஷ் குமாரின் கட்சி எல்லா தேர்தலிலும் நன்றாகவே செயல்பட்டது. ஆனால் இந்த தேர்தலில்தான் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி மிக மோசமாக செயல்பட்டு வெறும் 43 இடங்களில் வென்றுள்ளது. அதிலும் பாஜகவின் பெருவாரியான வெற்றியையும் ஐக்கிய ஜனதா தளம் குறைத்துள்ளது.

ஐக்கிய ஜனதா தளம்

ஐக்கிய ஜனதா தளம்

ஐக்கிய ஜனதா தளம் கட்சியால்தான் பாஜகவிற்கு விழ வேண்டிய பாஸ்வான் ஜாதியினரின் வாக்குகள் பெரிய அளவில் குறைந்து இருக்கிறது. இதனால் பாஜக கட்சிக்கு உள்ளேயே சிலர் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு எதிராக திரும்பி உள்ளனர். ஐக்கிய ஜனதா தளம் இல்லையென்றால் நாங்கள் அதிக இடங்களில் வென்று இருப்போம் என்று பாஜக கட்சிக்குள் சிலர் நம்புகிறார்கள்.

நிலைமை என்ன

நிலைமை என்ன

ஆனாலும் பாஜகவின் தேசிய தலைமை மற்றும் அமித் ஷா ஆகியோர் நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவியை கொடுப்பதில் உறுதியாக உள்ளனர். நிதிஷ்தான் முதல்வர் என்பதில் அமித் ஷா உறுதியாக உள்ளார். இதற்கு இரண்டு காரணங்களை சொல்கிறார்கள். காரணம் 1 - நிதிஷ் குமாருக்கு இருக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஆதரவு. இவர்களின் ஆதரவை தொடர்ந்து தங்கள் பக்கம் வைத்திருக்க பாஜக நினைக்கிறது.

ஏன் இப்படி

ஏன் இப்படி

நிதிஷ் குமாரின் ஆதரவு இருந்தால் அருகில் இருக்கும் மேற்கு வங்கத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளை வாங்கலாம் என்று பாஜக நினைக்கிறது. மேற்கு வங்கத்தில் மமதாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் பிறப்படுத்தப்பட்ட ஜாதியினரின் வாக்குகளை கைப்பற்ற.. நிதிஷை பாஜக பயன்படுத்த நினைக்கலாம். காவி கட்சி, குறிப்பிட்ட ஜாதிக்கான கட்சி என்ற அடையாளம் மொத்தமாக விழுந்து விட கூடாது என்று பாஜக கருதுகிறது.

மாநில கட்சி

மாநில கட்சி

பாஜகவிற்கு தற்போது நெருங்கிய மாநில கட்சி என்று எதுவும் இல்லை. சிரோன்மணி அகாலி தளம் கட்சியும் பாஜகவின் கூட்டணியில் இருந்து விலக்கிவிட்ட நிலையில் ஐக்கிய ஜனதா தளம் மட்டுமே பாஜகவிற்கு துணையாக உள்ளது. நிதிஷ் குமாரை முதல்வராக நியமிக்கவில்லை என்றால் அந்த கூட்டணியும் உடைந்துவிடும்.

மோசம்

மோசம்

நிதிஷ் குமாரும் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினால்.. பாஜக தேசிய அளவில் மாநில கட்சிகளின் துணை இன்றி தனித்து விடப்படும். இதனால் 2024 லோக்சபா தேர்தலில் தனித்து விடப்பட கூடாது என்று பாஜக நினைக்கிறது. நிதிஷ் குமாரின்.. நட்பு இப்போது அவசியம்.. அவருக்கு இப்போது பீகாரில் வாய்ஸ் குறைந்து போனாலும் கூட அவரின் நட்பு அவசியம் என்று பாஜக கருதுகிறது.

English summary
Bihar Election Result: Why BJP chose Nithish Kumar as the CM candidate even after the poor show.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X