டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகார் தேர்தல் 2020: வாக்களித்து சாதனை படைக்க மோடி ட்விட்டரில் அழைப்பு

பீகார் சட்டசபைத் தேர்தலுக்காக இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: பீகார் கடைசி கட்ட வாக்குப்பதிவில் சாதனை படைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஜனநாயகத்தின் புனித விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் மோடி. புதிய சகாப்தத்தை புதிய பீகாரை உருவாக்குவோம் என்று மகா கூட்டணி தலைவரும் லாலு பிரசாத் யாதவ் மகனுமான தேஜஸ்வி யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Recommended Video

    Bihar Assembly Election | இறுதிக்கட்ட தேர்தல் நிலவரம்

    பீகார் சட்டசபை தேர்தலில் இறுதி கட்ட வாக்குப் பதிவு இன்று 7 மணிக்கு தொடங்கியுள்ளது. பீகாரில் மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு இதுவரை 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளன. முதல் கட்டமாக கடந்த மாதம் 28ஆம் தேதி 71 தொகுதிகளிலும், 2ஆம் கட்டமாக கடந்த 3ஆம் தேதி 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. 3ஆம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. வடக்கு பீகார், சீமன்சல் பிராந்தியத்தில் உள்ள 16 மாவட்டங்களுக்கு உட்பட்ட 78 தொகுதிகளில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    Bihar Polls 2020 Live: PM Modi appeals people to vote in large numbers

    கடும் குளிர் நிலவுவதால் மந்தமான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 78 தொகுதிகளில் இன்று நடைபெறும் இறுதி கட்ட தேர்தலில் 1204 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு கையுறைகள், முக கவசங்கள் வழங்கப்படுகின்றன. தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டுள்ளன.

    இன்றைய தினம் வாக்காளர்கள் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, பீகார் சட்டசபைத் தேர்தலில் இன்று மூன்றாவது மற்றும் கடைசி கட்ட வாக்களிப்பு. ஜனநாயகத்தின் இந்த புனித விழாவில் அதிக எண்ணிக்கையில் பங்கேற்று புதிய வாக்களிப்பு சாதனையை படைக்க வேண்டும் என அனைத்து வாக்காளர்களையும் கேட்டுக்கொள்கிறேன். மாஸ்க் அணிய மறக்காதீர்கள், தனி மனித இடைவெளியை கடைபிடியுங்கள் என்றும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

    புதிய சகாப்தத்தை புதிய பீகாரை உருவாக்குவோம் என்று மகா கூட்டணி தலைவரும் லாலு பிரசாத் யாதவ் மகனுமான தேஜஸ்வி யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    பீகாரில் மாற்றம் அதிகரித்து வருகிறது. இன்று உங்கள் வாக்குகளை பதிவு செய்ய பொன்னான காலம், பீகாரின் அனைத்து வளர்ச்சி, அமைதி, ஸ்தாபனம் மற்றும் அமைப்பின் மாற்றம் மற்றும் புதிய சகாப்தத்தில் புதிய பீகாரை உருவாக்குவதற்கு உங்களுடைய வாக்குகளைப் பயன்படுத்தவும் என்றும் பதிவிட்டுள்ளார் தேஜஸ்வி யாதவ்.

    பீகாரில் 243 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவடைகிறது. வரும் 10ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    English summary
    Prime Minister Narendra Modi has appealed people to vote in large numbers in the third and last phase of the Assembly elections in Bihar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X