டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உலகமெங்கும் அச்சுறுத்தும் பறவை காய்ச்சல்... 12 நாடுகளில் பாதிப்பு... பீதியில் உறைந்த மக்கள்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் பீதியை ஏற்படுத்தி வரும் பறவை காய்ச்சல், உலகமெங்கும் 12-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கேரளா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான், ஹரியானா ஆகிய 5 மாநிலங்கள் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளன.

ஒழுங்காக தயாரிக்கப்பட்ட மற்றும் சமைத்த கோழி உணவு மூலம் இந்த நோய் மக்களுக்கு பரவுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

பறவைக்காய்ச்சல் பீதி... டெல்லியில் கண்காணிப்பு மையம்... தமிழகத்துக்கு, மத்திய அரசு எச்சரிக்கை! பறவைக்காய்ச்சல் பீதி... டெல்லியில் கண்காணிப்பு மையம்... தமிழகத்துக்கு, மத்திய அரசு எச்சரிக்கை!

பறவை காய்ச்சல் பீதி

பறவை காய்ச்சல் பீதி

இந்தியாவில் ஏற்கனவே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருவது பீதியை ஏற்படுத்தி உள்ளது. நமது அண்டை மாநிலமான கேரளா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான், ஹரியானா ஆகிய 5 மாநிலங்கள் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளன.

Recommended Video

    கோவை: கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல்.. எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்...!
     கேரளாவில் பாதிப்பு

    கேரளாவில் பாதிப்பு

    ஹரியானாவில் லட்சக்கணக்கான கோழிகளும், இமாச்சல பிரதேசத்தில் ஏராளமான பறவைகளும், மத்திய பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான மாடுகளும் பறவை காய்ச்சல் காரணமாக இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் ஆலப்புழா, கோட்டயம் ஆகிய பகுதிகளில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.

    உலக மக்கள் அச்சம்

    உலக மக்கள் அச்சம்

    இதனால் தமிழகம், கர்நாடகம் மாநிலங்களில் உஷார் நிலை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பறவை காய்ச்சல் நாடு முழுவதும் மேலும் பரவுவதை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பறவை காய்ச்சலை கட்டுப்படுத்த மத்திய அரசு டெல்லியில் கண்காணிப்பு மையம் அமைத்துள்ளது. இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலும் பறவை காய்ச்சல் பரவி வருவது இது கொரோனாவுக்கு அடுத்து பெரிய நோயாக உருவாகுமோ என்ற அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது.

    10 நாடுகளுக்கு பரவியது

    10 நாடுகளுக்கு பரவியது

    பறவை காய்ச்சல் கடந்த சில வாரங்களில் குறைந்தது 10 ஐரோப்பிய நாடுகளான நெதர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, டென்மார்க், சுவீடன், போலந்து, குரோஷியா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளைத் தாக்கியுள்ளதாக ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ஈசிடிசி) தெரிவித்துள்ளது.

     4,00,000 பறவைகளை அழிக்க திட்டம்

    4,00,000 பறவைகளை அழிக்க திட்டம்

    தென் கொரியா மற்றும் ஜப்பானிலும் பறவை காய்ச்சல் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள 47 மாகாணங்களில் பறவை காய்ச்சல் 20 சதவீதத்தை எட்டியுள்ளது. பிரான்சில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் ஏற்கனவே 2,00,000 கோழிகள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் 4,00,000 பறவைகளை அழிக்க அந்த நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளது.

    காட்டு பறவைகளால் பாதிப்பு

    காட்டு பறவைகளால் பாதிப்பு

    ஜெர்மனியில் லோயர் சாக்சோனியின் வடக்கு மாநிலத்தில் உள்ள க்ளோபன்பர்க் பிராந்தியத்தில் இரண்டு பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. அதிகமான கோழி பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் காணப்பட்டதை அடுத்து சுமார் 62,000 வான்கோழிகளும் வாத்துகளும் அழிக்கப்பட்டுள்ளன. தென் கொரியாவில் அக்டோபர் மாதத்தில் காட்டு பறவைகள் மூலம் பறவைக் காய்ச்சல் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. தென் கொரியாவின் வேளாண் துறை அமைச்சகம் கோழி பண்ணைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய போக்குவரத்துக்கு தற்காலிகமாக தடை விதித்துளளது. அனைத்து கோழி பண்ணைகள் மற்றும் கால்நடை உற்பத்தி வசதிகளுக்காக 48 மணி நேர இயக்க கட்டுப்பாட்டு அறை அங்கு இயங்கி வருகிறது.

    மனிதர்களுக்கு பரவுமா?

    மனிதர்களுக்கு பரவுமா?

    ஜப்பானில் பறவை காய்ச்சல் காரணமாக நாடு முழுவதும் கோழி பண்ணைகளை கிருமி நீக்கம் செய்து சுத்தப்படுத்த ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் முதல் 6 பிராந்திய மாகாணங்களில் நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு எளிதாக பரவாது. ஆனாலும் மிகக்கடுமையானது மற்றும் ஆபத்தானது ஆகும். இந்த காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்ட மனிதர்களில் 10 பேரில் 6-ல் இறப்புகளுக்கு வழிவகுக்கலாம் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

    வெப்பத்தை வைரஸ் தாக்குபிடிக்காது

    வெப்பத்தை வைரஸ் தாக்குபிடிக்காது

    உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட உயிருடன் அல்லது இறந்த பறவைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்படலாம். ஆனால் இது பொதுவாக ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு பரவுவதில்லை.
    ஒழுங்காக தயாரிக்கப்பட்ட மற்றும் சமைத்த கோழி உணவு மூலம் இந்த நோய் மக்களுக்கு பரவுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்த வைரஸ் வெப்பத்தை தாக்கு பிடிக்க முடியாத உணர்திறன் கொண்டது, மேலும் சமையல் வெப்பநிலையில் இந்த வைரஸ் இறந்துவிடுகிறது என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது

    English summary
    The bird flu outbreak in India has spread to more than 12 countries around the world
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X