டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெறித்தனம்.. பாஜக தோல்வியை.. பிரியாணி சாப்பிட்டு கொண்டாடிய எதிர்ப்பாளர்கள்.. செம சேல்ஸாம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Delhi Assembly Election Result | மனைவிக்கு காதலோடு கேக் ஊட்டிய கெஜ்ரிவால்

    டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜகவின் படுதோல்வியை பிரியாணியுடன் கொண்டாடியுள்ளனர் அக்கட்சியின் எதிர்ப்பாளர்கள். இதனால் டெல்லியில் பிரியாணி விற்பனை நேற்று படுஜோராக இருந்ததாம்.

    டெல்லி சட்டசபை தேர்தலில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் தீவிர பிரசாரம் செய்தார். அவர் தமது பிரசாரத்தின் போது, மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக ஷாகீன் பாக்கில் போராடுகிறவர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பிரியாணி அனுப்புகிறார் என கூறியிருந்தார்.

    Biryani sales rise after Delhi Assembly Eelctions Results

    இதனை பின்பற்றி பாஜகவினரும் இதே பிரசாரத்தை முன்னெடுத்தனர். ஆனால் சி.ஏ.ஏ.வுக்கு எதிர்ப்பு என்கிற எந்த வித நிலைப்பாட்டையும் அரவிந்த் கெஜ்ரிவால் எடுக்கவும் இல்லை. ஷாகீன் பாக் போராட்டக்காரர்களை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தும் பேசவில்லை.

    இந்த விவகாரத்தில் எதுவும் பேசாமல் அமைதியாக கடந்து சென்றார் கெஜ்ரிவால் . இந்நிலையில் டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி அமோக வெற்றியைப் பெற்றது; பாஜக படுதோல்வியை அடைந்தது.

    டெல்லி நல்லபடியா முடிஞ்சாச்சு.. அடுத்து கொல்கத்தாவும், சென்னையும் பாக்கி இருக்கு.. பிகே செம பிஸி! டெல்லி நல்லபடியா முடிஞ்சாச்சு.. அடுத்து கொல்கத்தாவும், சென்னையும் பாக்கி இருக்கு.. பிகே செம பிஸி!

    இதனையடுத்து பாஜக எதிர்ப்பாளர்கள் அக்கட்சியினருக்கு பதிலடி தரும் வகையில் பிரியாணி வாங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். பாஜகவின் தோல்வியை கொண்டாடும் வகையில் பிரியாணி விருந்துகளும் நடத்தப்பட்டன.

    இதனால் டெல்லியில் நேற்று பிரியாணி விற்பனை படுஜோராக இருந்ததாக உணவகங்களின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    English summary
    After Aam Aadmi Party’s victory in the Delhi assembly elections yesterday was a spike in sales of biryani.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X