டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடியோட ஆட்டத்தை இனிமேல்தான் பார்க்க போறாங்க.. மாநிலங்களவையிலும் தனிப்பெரும்பான்மை

Google Oneindia Tamil News

டெல்லி: இந்த தேர்தலில் மக்களவையில் தனிப்பெரும்பான்மை பெற்ற பாஜக கூட்டணி, மாநிலங்களவையில் அடுத்த ஆண்டு தனிப்பெரும்பான்மை பெற உள்ளதால் இனி நினைத்ததை சாதிக்கும் சர்வ வல்லமை பெற்றுள்ளது பாஜக.

பிரதமர் மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று 2014ல் ஆட்சிக்கு வந்ததது. இருந்தபோதும் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019 வரை கடந்த 5 ஆண்டுகளில் பல முக்கியமான மசோதக்களை நிறைவேற்ற முடியாமல் தவித்து போனது.

அதற்கு முக்கிய காரணம் பாஜக மற்றும் அதன் கூட்டணிக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை. இதனால் முத்தலாக் மசோதா, நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதக்கள் கிடப்பில் உள்ளன. மாநிலங்களவையில் இவற்றை நிறைவேற்றவிடாமல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடக்கி வந்தன.

சாதியை சொல்லி கேவலப்படுத்திய சீனியர் பெண் மிருகங்கள்.. வேதனையில் தற்கொலை செய்த ஜூனியர் டாக்டர் சாதியை சொல்லி கேவலப்படுத்திய சீனியர் பெண் மிருகங்கள்.. வேதனையில் தற்கொலை செய்த ஜூனியர் டாக்டர்

ராஜ்யசபாவில் பலம்

ராஜ்யசபாவில் பலம்

ஆனால் அடுத்த ஆண்டு இறுதியில் மாநிலங்களவையில் பாஜக கூட்டணி பெரும்பான்மையை பெற உள்ளது. மாநிலங்களவையில் மொத்தம் 245 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 241 பேர் எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 4பேர் நியமன எம்பிக்கள் ஆவார். பாஜக கூட்டணிக்கு தற்போது 102 இடங்கள் உள்ளன. பாஜக மட்டும் 73 இடங்களை வைத்துள்ளது.

பாஜக மெஜாரிட்டி

பாஜக மெஜாரிட்டி

அடுத்த ஆண்டு இறுதிக்குள் 80 மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளது. இதில் உத்தரப்பிரதேசம், பீகார், குஜராத், மத்திய பிரதேசம் , தமிழ்நாடு, உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பாஜக கூட்டணிக்கு 21 இடங்கள் வரை கிடைக்க உள்ளது.

ஆதரவு நிலைப்பாடு

ஆதரவு நிலைப்பாடு

இதன் காரணமாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் அடுத்த ஆண்டு இறுதியில் 127 ஆக (நியமன எம்பிக்கள் 4) உயர்ந்துவிடும். இது தனிப்பெரும்பான்மையைவிட அதிகமாகும். இதேபோல் டிஆர்எஸ் கட்சியும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்பு உள்ளது.

மசோத்தகள் எளிதாக நிறைவேறும்

மசோத்தகள் எளிதாக நிறைவேறும்

இதன் காரணமாக இனி இஷ்டம்போல் மசோதக்களை தாக்கல் செய்து மோடி அரசால் அதனை சட்டமாக்க முடியும். அதேநேரம் தற்போது கிடப்பில் உள்ள முத்தலாக் மசோதா, நில எடுப்பு மசோத உள்பட பல்வேறு முக்கிய மசோதாக்களை பாஜக அரசால் சட்டமாக்க முடியும். இப்படி ஒரு சூழல் ஆளும் கட்சிக்கு கிடைத்திருப்பது மிகவும் அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

English summary
BJP's NDA government get full majority in Rajya Sabha at 2020
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X