டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜகவும் ஆர்எஸ்எஸும் யாரை நேசிக்கிறார்கள் தெரியுமா? கலக்கலாய் டிவிட் போட்ட ராகுல்!

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடி பேசிய அதே நேரத்தில் பதிலடி கொடுத்த ராகுல் காந்தி- வீடியோ

    டெல்லி: ஆர்.எஸ்.எஸ்-ம் , பா.ஜ.கவும் கடவுளை விரும்பவில்லை கோட்சேவைதான் விரும்புகிறார்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கோட்சே குறித்து பேசியது பெரும் சர்ச்சையானது. கமலின் பேச்சுக்கு பிரதமர் மோடி ஒரு இந்து தீவிரவாதியாக இருக்க முடியாது, தீவிரவாதியாக இருந்தால் அவர் இந்துவாக இருக்க முடியாது என்றார்.

    இந்த நிலையில் பெண் சாமியாரும், மத்திய பிரதேச மாநிலம் போபால் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளருமான பிரக்யா சிங் தாக்குர் டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

    இப்போவா பிரஸ் மீட் பண்ணுவீங்க.. சரியில்லையே இது.. மோடிக்கு 'அட் அ டைமில்' ராகுல் காந்தி பதிலடி இப்போவா பிரஸ் மீட் பண்ணுவீங்க.. சரியில்லையே இது.. மோடிக்கு 'அட் அ டைமில்' ராகுல் காந்தி பதிலடி

    பிரக்யா சிங் பேச்சு

    பிரக்யா சிங் பேச்சு

    அப்போது அவரிடம் நாதுராம் கோட்சேயை இந்து தீவிரவாதி என கமல்ஹாசன் கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், "நாதுராம் கோட்சே தேச பக்தராக இருந்தார்; இருக்கிறார்; அப்படியே தொடர்ந்து இருப்பார்" என பதில் அளித்தார்.

    கண்டனம்

    கண்டனம்

    பிரக்யா சிங்கின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
    பிரக்யா சிங்கும் தனது பேச்சுக்காக மன்னிப்பு கோரினார். பிரக்யா சிங்கின் பேச்சுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்தார்.

    கோட்சேவைதான்..

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல்காந்தி இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதாவது ஆர்.எஸ்.எஸ்-ம் , பா.ஜ.கவும் கடவுளை விரும்பவில்லை; கோட்சேவை தான் விரும்புகிறார்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    அதிக லைக்ஸ்

    அதிக லைக்ஸ்

    இதனை ஆங்கிலமும் இந்தியும் கலந்த ட்வீட்டாக ஹைக்கூ கவிதையை போல் டிவிட்டியுள்ளார் ராகுல்காந்தி. ராகுலின் இந்த டிவிட் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரால் லைக் செய்யப்பட்டுள்ளது. 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஷேர் செய்துள்ளனர்.

    English summary
    Rahul Gandhi has twitted that BJP and RSS not loving god. They are loving godse.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X