டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சத்தீஸ்கர் தேர்தல்.. 40 "ஸ்டார்" பேச்சாளர்களை களம் இறக்கும் பாஜக

Google Oneindia Tamil News

Recommended Video

    40 'ஸ்டார்' பேச்சாளர்களை களம் இறக்கும் பாஜக-வீடியோ

    டெல்லி: சத்தீஸ்கரில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்காக 40 நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலத்துக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எப்படியாயினும் ஆட்சியை தக்க வைத்து கொள்ள பாஜக போராடுகிறது. நக்ஸல் நடமாட்டங்களுக்கு பெயர் பெற்ற மாநிலம் சத்தீஸ்கர்தான்.

    BJP announces list of 40 star campaigner with some glamor quotient in it

    கடந்த 2002-ஆம் ஆண்டு நக்ஸலைட் அமைப்புகளை சத்தீஸ்கரில் தடை செய்த பெருமை ரமான் சிங்கையே சாரும். இவர் இதுவரை 3 முறை முதல்வராக பதவி வகித்து வருகிறார். எனவே இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற முயற்சி எடுத்து வருகிறது.

    அதன்படி சத்தீஸ்கரில் முதல்கட்ட பாஜக வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அங்குள்ள 90 இடங்களில் 77 இடங்களில் போட்டியிடுபவர்களின் பெயர்கள் வெளியாகி உள்ளது. அதுபோல் 40 நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது.

    அதில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, ம.பி, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளனர். இவர்கள் தவிர்த்து பவன் சாய், ஹேமமாலினி, மனோஜ் திவாரி, ஸ்மிருதி இரானி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், உமா பாரதி, ஜேபி நட்டா, ரவி சங்கர் பிரசாத், நிதிதர்மேந்திர பிரதான், எம்பிக்கள் அபிஷேக் சிங், ரன்விஜய் பிரதாப் சிங் ஜூதேவ் உள்ளிட்டோரும் உள்ளனர்.

    குரல் என்னோடதில்லைனு சொல்றாரே.. குழந்தை எனது இல்லைனு சொல்ல ஏன் மறுக்கிறார்- தங்கதமிழ்செல்வன் கேள்வி குரல் என்னோடதில்லைனு சொல்றாரே.. குழந்தை எனது இல்லைனு சொல்ல ஏன் மறுக்கிறார்- தங்கதமிழ்செல்வன் கேள்வி

    ரமேஷ் பயாஸ், ஹூக்கும்தேவ் நாராயண் சிங் யாதவ், ராம்கிரிபால் யாதவ், பிரிஜிமோகன் அகர்வால், விஷ்ணுதேவ் சாய் மற்றும் தினேஷ் காஷ்யப் ஆகியோரும் இடம்பெறுள்ளனர்.

    English summary
    The Bharatiya Janata Party (BJP) has issued a 40-member list of star campaigner for Chhattisgarh for the forthcoming Assembly elections in the state that included over a dozen of Union ministers and around half a dozen chief ministers besides Prime Minister Narendra Modi and party president Amit Shah.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X