டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிஏஏ குறித்த சர்ச்சை பேச்சு.. மைக்ரோசாப்ட் சிஇஒ சத்ய நாடெல்லா மீது பாஜக எம்பி கடும் பாய்ச்சல்

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேசியதற்காக வலதுசாரிகளின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாடெல்லா..

பஸ் ஃபீட் இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டியில் "இந்தியாவில் நடந்து கொண்டிருப்பவை வருத்தம் அளிக்கின்றன. அது மிகவும் தவறு. இந்தியாவுக்கு வரும் ஒரு வங்கதேச அகதி, இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தகத்தை உருவாக்குகிறவராகவோ அல்லது இன்ஃபோசிஸின் அடுத்த தலைமை செயல் அதிகாரியாக வரவேண்டும் என்றோ நான் விரும்புகிறேன்" என்று கூறியிருந்தார்.

இதை ஸ்மித் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட நிலையில், பாஜகவினர் மற்றும் தீவிர வலதுசாரிகள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாடெல்லாவுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

மொத்தமாக சொதப்பிய பிளான்.. கே.எஸ் அழகிரி போட்ட யார்க்கரில் சிக்ஸர் அடித்த ஸ்டாலின்.. காங். ஷாக்!மொத்தமாக சொதப்பிய பிளான்.. கே.எஸ் அழகிரி போட்ட யார்க்கரில் சிக்ஸர் அடித்த ஸ்டாலின்.. காங். ஷாக்!

எல்லைகள் வரையறை

எல்லைகள் வரையறை

இதனிடையே இதுபற்றி சத்ய நாடெல்லா அளித்த விளக்கத்தை மைக்ரோசாஃப்ட் இந்தியா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் எல்லா நாடுகளும் தமது எல்லைகளை வரையறுக்க வேண்டும் என்றும், தேசிய பாதுகாப்பையும், குடியேற்ற கொள்ளைகளையும் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

பன்முக கலாச்சாரம்

பன்முக கலாச்சாரம்

ஜனநாயகத்தில் இதுபோன்ற வரைமுறைகளை அரசாங்கங்கள் விவாதங்களை நடத்தி எல்லைகளை வரையறுத்து கொள்ளும் இந்திய பாரம்பரியத்தாலும், பன்முக கலாசாரம் உள்ள இந்தியாவில் வளர்ந்ததாலும், அமெரிக்காவில் ஒரு குடியேறியாகப் பெற்ற அனுபவத்தாலும் தாம் வார்த்தெடுக்கப்பட்டேன்.

வழிநடத்தமுடியும்

வழிநடத்தமுடியும்

இந்தியா குறித்து என்னுடைய நம்பிக்கை என்னவெனில் ஒரு புலம்பெயர்ந்தவரால் வளமான ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை உருவாக்கவோ அல்லது இந்திய பொருளாதாரத்துக்கும் இந்திய சமூகத்துக்கும் நன்மை பயக்கும் வகையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தை வழிநடத்தவோ முடியும் " இவ்வாறு கூறினார்.

சமூக வலைதளங்களில்

சமூக வலைதளங்களில்

இந்த பதிவினை பார்த்து பாஜக ஆதரவாளர்கள் மற்றும் தீவிர வலதுசாரிகள் கடும் கோபம் அடைந்துள்ளனர். நாடெல்லாவின் கருத்துக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இதனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் தற்போது டிரெண்டாகி வருகிறது.

கடும் நையாண்டி

பாஜக எம்பி மீனாக்ஷி லேகி தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் எதிர்வினை ஆற்றி உள்ளார். அவர் தனது பதிவில் "படித்தவர்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என்பதற்கான சிறந்த எடுத்துகாட்டு இது" என்று சத்ய நாதெல்லாவை நக்கல் செய்து விமர்சித்துள்ளார். .

English summary
BJP mp Meenakshi Lekhi attacks Microsoft CEO Satya Nadella Speaks Out Against CAA
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X