டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

6 மாதத்தில் நடந்த 6 விஷயங்கள்.. மாஸ் வேகம் காட்டும் பாஜக அரசு.. அமித் ஷாவின் அடுத்த குறி இதுவா?

மத்தியில் இரண்டாவது முறை ஆட்சியை பிடித்ததில் இருந்து பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து அதிரடி சட்டங்களை கொண்டு வருகிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: மத்தியில் இரண்டாவது முறை ஆட்சியை பிடித்ததில் இருந்து பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து அதிரடி சட்டங்களை கொண்டு வருகிறது. அதேபோல் தங்களுடைய கனவு வாக்குறுதிகளையும் பாஜக வேகமாக நிறைவேற்றி வருகிறது.

நேற்று ராஜ்யசபாவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் பாஜகவின் கனவு திட்டங்களில் ஒன்று செயலுக்கு சட்டமாக வந்துள்ளது. இன்னும் பாஜக நிறைய முக்கிய திட்டங்களை செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக இரண்டாவது முறை ஆட்சி பொறுப்பை ஏற்று 6 மாதங்கள்தான் ஆகிறது. கடந்த 5 வருடத்தை விட இந்த 6 மாதத்தில் பாஜக அசுர வேகத்தில் செயல்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் பதவி... அன்புமணி vs ரவீந்தரநாத்... யாருக்கு யோகம்? மத்திய அமைச்சர் பதவி... அன்புமணி vs ரவீந்தரநாத்... யாருக்கு யோகம்?

இரண்டாவது முறை

இரண்டாவது முறை

ஆம் பாஜக இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்த பின், அதிவேகமாக பல்வேறு மசோதாக்களை பாஜக லோக்சபா, ராஜ்யசபா இரண்டிலும் நிறைவேற்றியது. முதலில் முத்தலாக் சட்டம் கொண்டு வரப்பட்டது. பெரிய அளவில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு நிலவியது. ஆனால் இரண்டு அவையிலும் கஷ்டப்பட்டு முத்தலாக் மசோதாவை நிறைவேற்றி அதை சட்டமாக்கியது.

மோட்டார் வாகன சட்டம்

மோட்டார் வாகன சட்டம்

அதேபோல் இன்னொரு புதிய மோட்டார் வாகன சட்டம் என்று சர்ச்சைக்குரிய சட்டத்தை கூட பாஜக ராஜ்யசபாவில் பெரும்பான்மையை இல்லாமல் நிறைவேற்றியது. பாஜகவின் கூட்டணியில் இல்லாத வேறு சில கட்சிகளும் இந்த மசோதாவிற்கு ஆதரவு அளித்தது. அதன்பின்தான் மிகப்பெரிய அதிரடியை பாஜக செய்தது.

மத்திய பாஜக அரசு

மத்திய பாஜக அரசு

ஆம் யாரும் எதிர்பார்க்காத வகையில் மத்திய பாஜக அரசு, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரத்தை நீக்கியது. அதோடு ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக்கியது. லடாக் என்ற இன்னொரு யூனியன் பிரதேசமும் உருவானது. இதை பாஜகவின் பல வருட கனவு என்று கூட கூறலாம்.

ராமர் கோவில் எப்படி

ராமர் கோவில் எப்படி

இந்த நிலையில் பாஜகவின் இன்னொரு கனவான ராமர் கோவில் நினைவாகும் தருணம் உருவாகி உள்ளது. அயோத்தி வழக்கின் தீர்ப்பின் மூலம் ராமர் கோவில் கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு பெற்றுள்ளது. அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ராம ஜென்மபூமி நியாஸ் அமைப்புக்கு வழங்கப்படவேண்டும், என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

என்ஆர்சி

என்ஆர்சி

இது பாஜகவின் பல வருட கனவு திட்டம் ஆகும். இன்னொரு பக்கம் பாஜக மிகவும் வெற்றிகரமாக என்ஆர்சியை அசாமில் நிறைவேற்றியது. இதன்படி 1971க்கு பின் இந்தியாவில் வங்கதேசத்தில் இருந்து முறையின்றி குடியேறிவர்கள் வெளியேற்றப்படுவார்கள். கடைசியாக வெளியான குடிமக்களின் தேசிய பதிவேட்டில் 33 மில்லியன் விண்ணப்பங்களில் 1.9 மில்லியன் மக்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை . இவர்களின் பெயர் மறுபரிசீலனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.

தற்போது மீண்டும்

தற்போது மீண்டும்

இப்படி வரிசையாக நிறைய சட்டங்களை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசுதான் தற்போது பெரும் எதிர்ப்பிற்கு இடையிலும், பரபரப்பிற்கு இடையிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றி உள்ளது. நேற்று இந்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.

எதனால் சிக்கல்

எதனால் சிக்கல்

இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக, இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், ஜைனர், கிறிஸ்தவர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும்.ஆனால் இந்த மசோதா இஸ்லாமியர்களுக்கு பொருந்தாது.

அடுத்து என்ன

அடுத்து என்ன

இதனால் அடுத்து மத்திய பாஜக அரசு என்ன மாதிரியான சட்டத்தை கொண்டு வரும். என்ன கோரிக்கையை மத்திய பாஜக அரசு நிறைவேற்றும் என்று கேள்வி எழுந்துள்ளது. வேறு எதுவும் பெரிய திட்டம் பாஜக வைத்துள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலும் பாஜக அரசு பொது சிவில் சட்டம் கொண்டு வர முயற்சி எடுக்கும். இதனால் இஸ்லாமியர்கள் மேலும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

English summary
BJP did 6 important moves in the last 6 months including Citizenship Amendment Bill.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X