டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Exit polls: தென்னிந்தியாவின் பாதையே தனி.. 3 மாநிலங்களில் பாஜகவுக்கு அடி.. கர்நாடகத்தில் அட!

Google Oneindia Tamil News

Recommended Video

    Exit polls 2019 | பாஜகவிற்கு சாதகமான கருத்துக்கணிப்பு முடிவுகள்

    டெல்லி: எதிர்பார்த்ததை போலவே தென் இந்தியாவில், கர்நாடகா தவிர்த்து பிற மாநிலங்களில் பாஜக கூட்டணிக்கு கடுமையான அடி கொடுக்கப்பட்டுள்ளதாகவே பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

    நாடு முழுவதிலும் நாங்கள் வளர்ந்துவிட்டோம் என பாஜக சொன்னாலும், ஹிந்தியை தாய் மொழியாக கொண்ட நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மாநிலங்களில்தான் பாஜக பலமாக இருக்கிறது என்பதே நிதர்சனம்.

    பிற மாநிலங்களில் கூட்டணி கட்சிகள் முதுகில்தான் பாஜக சவாரி செய்து வருகிறது. இந்த லோக்சபா தேர்தலிலும், அதுதான் நடந்துள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது எக்ஸிட் போல் முடிவுகள்.

    ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் - தெலுங்கு தேசம் இடையே இழுபறியா? என்ன சொல்கிறது எக்ஸிட் போல்? ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் - தெலுங்கு தேசம் இடையே இழுபறியா? என்ன சொல்கிறது எக்ஸிட் போல்?

    கல்வியறிவு

    கல்வியறிவு

    ஒப்பீட்டளவில், கல்வியறிவு, அடிப்படை கட்டமைப்பு வசதி என பல விஷயங்களிலும், வளர்ச்சியடைந்தவை தென் மாநிலங்கள்தான். இங்கு, ஏற்கனவே பாஜக பலமாக உள்ள கர்நாடகாவை தவிர்த்து பார்த்தால், தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் பாஜகவுக்கு கடும் அடி காத்துள்ளது என்பதுதான் பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகளாக உள்ளது.

    எக்ஸிட் போல் முடிவுகள்

    எக்ஸிட் போல் முடிவுகள்

    ஒரு பானை சோற்றுக்கு, ஒரு சோறு பதம் என்பதை போல, தென் இந்தியாவில், நாம் இந்தியா டுடே - ஆக்சிஸ் எக்ஸிட் போல் முடிவுகளை மட்டும் பார்க்கலாம். இந்தியா டுடே கருத்துக் கணிப்புப்படி கேரளாவில், காங்கிரஸ் கூட்டணி 15-16 தொகுதிகளை வெல்லக் கூடும். பிற கட்சிகள் அதாவது இடதுசாரிகள், 3-5 தொகுதிகளை வெல்ல கூடுமாம். பாஜக 0-1 தொகுதியை வெல்ல வாய்ப்புள்ளதாக கூறுகிறது. இந்த மாநிலத்தின் மொத்த தொகுதிகள் எண்ணிக்கை 20 ஆகும்.

    தமிழக நிலவரம்

    தமிழக நிலவரம்

    தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில், அதிமுக கூட்டணி (பாஜகவை உள்ளடக்கியது) 0-4 தொகுதிகளை மட்டுமே வெல்லக்கூடும். திமுக கூட்டணி (காங். உள்ளடக்கியது) 34-38 தொகுதிகளை வெல்லக்கூடும். அதாவது கிட்டத்தட்ட க்ளீன் ஸ்வீப் திமுக கூட்டணிக்கு கிடைக்கும் என்கிறது இந்தியா டுடே எக்ஸிட் போல்.

    ஆந்திரா

    ஆந்திரா

    ஆந்திராவை பொறுத்தளவில், பாஜக கூட்டணிக்கு வெறும் 0-1 தொகுதிதான் கிடைக்குமாம். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 18-20 தொகுதிகளும், தெலுங்கு தேசத்திற்கு 4-6 தொகுதிகளும், காங்கிரசுக்கு 1 தொகுதியும் கிடைக்கும் என்கிறது இந்தியா டுடே எக்ஸிட் போல். ஆக.. ஆந்திராவிலும் பாஜக அவுட்.

    தெலுங்கானா

    தெலுங்கானா

    மற்றொரு தென் மாநிலமான தெலுங்கானாவில், பாஜக 1-3 தொகுதிகளைத்தான் வெல்ல முடியுமாம். காங்கிரஸ் கூட்டணிக்கும் இதே அளவு சீட்கள்தான் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறும் இந்தியா டுடே எக்ஸிட் போல், தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி 10-12 தொகுதிகளை வெல்லும் என்கிறது.

    கர்நாடகா மட்டும்

    கர்நாடகா மட்டும்

    ஏற்கனவே ஆட்சி செய்த கர்நாடகாவில் மட்டுமே பாஜகவுக்கு ஆறுதல். அங்கு 21-25 தொகுதிகளை பாஜக வெல்லக்கூடும். காங்கிரஸ்-மஜத கூட்டணி 3-6 தொகுதிகளையும், பிறர் 1 தொகுதியையும் வெல்லக்கூடும். ஆக மொத்தம், தென் இந்தியாவை மட்டும் கணக்கில் எடுத்தால், பாஜக தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி வெறும் 23-33 தொகுதிகளை மட்டுமே வெல்லக்கூடும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 55-63 தொகுதிகளை வெல்லும். பிற கட்சிகள் 35-46 தொகுதிகளை வெல்லும்.

    பாஜகவை பயமுறுத்தும் தென் இந்தியா

    பாஜகவை பயமுறுத்தும் தென் இந்தியா

    தென் இந்தியாவின் டிரெண்ட்டை வைத்து பார்த்தால் பாஜக கடும் பின்னடைவை சந்தித்துள்ளது நன்கு புலப்படுகிறது. கல்வியறிவு மிக்க மாநிலங்களான இவை பாஜகவின் எந்த பிரச்சாரத்திற்கும், வாட்ஸ்அப் மூளைச்சலவைகளுக்கும், மயங்க மறுத்துள்ளன என்பதே இந்த கருத்துக் கணிப்பின் சாராம்சம் என்றும் சொல்லலாம்.

    English summary
    According to the exit polls, BJP facing worst defeat in South India but sweeps north India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X