டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் ஈபிஎஸ்-க்கு முக்கியத்தும் கொடுத்த பாஜக!

Google Oneindia Tamil News

டெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக முக்கியத்துவம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களா முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் இருந்து வருகின்றனர். ஆனால் அதிமுகவை தம் வசம் கொண்டுவருவதில் இருவரும் முனைப்பு காட்டுகின்றனர்.

BJP gives importance to EPS in NDA Meeting

எப்போதும் இருவரது கையெழுத்துடன் அதிமுக அறிக்கைகள் வெளிவரும். அண்மையில் எடப்பாடி பழனிசாமி பெயரில் மட்டும் அறிக்கை வெளியாகி சர்ச்சையானது.

மோடி பதவி ஏற்பு விழா... இலங்கை அதிபர் சிறிசேனா பங்கேற்பு மோடி பதவி ஏற்பு விழா... இலங்கை அதிபர் சிறிசேனா பங்கேற்பு

இந்நிலையில் டெல்லியில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜகவின் அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இருவருமே இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் கூட்டணி கட்சித் தலைவர்கள் அமர்ந்திருந்த மேடையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமர்ந்திருந்தார்.

முன்வரிசையில் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு அருகில் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்திருந்தார். அதேபோல் பிரதமராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது கூட்டணி கட்சித் தலைவர்கள் வரிசையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
BJP gave importance to Tamilnadu Chief Minister Edappadi Palanisamy in the today NDA Meeting in Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X