டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிமுகவை இனியும் தாங்கி பயனில்லை.. டொப்பென்று போட்டு விட்டு.. திமுகவை கையில் எடுக்கும் பாஜக

Google Oneindia Tamil News

Recommended Video

    நேற்றைய கூட்டத்தில் என்ன நடந்தது? அதிமுக பாஜக கூட்டணியில் விரிசல் ?

    டெல்லி: மத்திய பாஜக அரசு அண்மைக்காலமாக திமுகவுடன் நெருக்கமாக இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. நாடாளுன்றத்தில் திமுகவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை சுட்டிக்காட்டி அதிமுகவை கழட்டிவிட பாஜக தலைமை யோசித்து வருகிறதா என்று முணுமுணுப்புகள் ஆரம்பித்துள்ளது

    கடந்த சில நாட்களாக நாடாளுமன்றங்களில் நடந்த வரும் விவாதங்களை கூர்ந்து கவனீத்தீர்கள் என்றால் ஒருவிஷயம் நன்றாக புலம்படும். என்ன என்கிறீர்களா? திமுக உறுப்பினர்கள் அதிக நேரம் நாடாளுமன்றத்தில் சரமாரியாக கேள்விகளை எழுப்பி பேசி வருவது தான். மத்தியில் ஆளும் பாஜக அரசு திமுகக்கு அதிக அளவு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இதன் மூலம் திமுகவுடன் அதிகமான நெருக்கத்தை பாஜக கடைபிடிக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    ஏனெனில் தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கு அதிமுகவில் நிலவும் உள்கட்சி பூசல் தான் காரணம் என்று பாஜக உறுதியாக நம்புகிறது. எடப்பாடியார் சட்டமன்ற இடைத்தேர்தலில் கவனம் செலுத்விட்டு, லோக்சபா தேர்தலில் கோட்டைவிட்டதாக பாஜக தலைமை கோபத்தில் உள்ளதாம்.

    தங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்! தங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்!

    அதிமுக வெற்றி பெறுமா?

    அதிமுக வெற்றி பெறுமா?

    எப்படியும் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவற்கு வாய்ப்பு குறைவு என்ற தகவல்களால் அதிமுகவை கழட்டிவிட்டு திமுக பக்கம் சாய பாஜக வாய்ப்புகளை தேடி வருகிறதாகவும் டெல்லியில் சொல்லிக் கொள்கிறார்கள்.

    திமுகவுக்கு கிடைத்த முன்னுரிமை

    திமுகவுக்கு கிடைத்த முன்னுரிமை

    இந்தியா முழுவதும் பெரிய அளவில் வெற்றி பெற்ற பாஜக தமிழகத்தில் வெற்றி பெறாமல் போனதை கவுரக்குறைச்சலாக எண்ணுகிறது. எடப்பாடி ஓபிஎஸ் மீது நம்பிக்கை வைத்து தேர்தலை சந்தித்து இப்படி ஒரு தோல்வியை சந்திக்க நேரிட்டதை எண்ணி பாஜக கடும் அதிருப்தியில் இருக்கிறதாம். அதன் வெளிப்பாடு தான் நாடாளுமன்றத்தில் திமுகவுக்கு கிடைத்த முன்னுரிமை.

    ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மறுப்பு

    ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மறுப்பு

    இதன் மூலம் அண்மைக்காலமாக பாஜக நெருக்கம் காட்ட ஆரம்பித்திருப்பாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. துணை சபாநாயகர் பதவியை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மறுத்துவிட்டதால் அந்த பதவியை திமுகவுக்கு தரலாமா என்று பாஜக யோசித்து வருகிறதாம்.

    அதிமுகவை தாங்க முடியாது

    அதிமுகவை தாங்க முடியாது

    தமிழக மாநில பாஜக தலைமை அதிமுகவுடன் இதுவரை இணக்கமாக இருந்துவரும் நிலையில், லோக்சபா தேர்தல் படுதோல்விக்கு பிறகு மத்திய பாஜக இனியும் அதிமுகவை தாங்கி பயனில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுகவை விமர்சிக்க பாஜக தலைமை மறைமுகமாக உத்தரவு போட்டுள்ளதாம்.

    கோபம் குறையவில்லை

    கோபம் குறையவில்லை

    இதனால் அதிர்ச்சியுள்ள அதிமுக, பாஜகவின் கோபத்தை குறைக்க கோயில்களில் மழைக்காக யாகம் உள்பட பல்வேறு பணிகளை செய்துவருகிறது. எனினும் கோபம் குறைந்ததாக தெரியவில்லை. இதன் காரணமாகவே அதிமுகவின் உள்கட்சி பஞ்சாயத்து ஓய்வதற்கு இதுவரை பாஜக எந்த ஆலோசனையும் வழங்காமல் இருந்து வருகிறதாம். இதனிடையே 2021ம் ஆண்டுக்குள் பாஜகவை தமிழகத்தில் பெரிய அளவில் வலுப்படுத்தும் வேலைகளை நிர்வாகிகளை வைத்து பாஜக தலைமை சத்தம் இல்லாமல் செய்து வருகிறதாம்.

    English summary
    bjp good relation ship with dmk in parliament after lok sabha election defeat, bjp govt give more time to dmk for question hours
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X