டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொல்கத்தாவில் மமதா.. டெல்லியில் நாயுடு.. ஒரே புள்ளியில் இணையும் எதிர்க்கட்சிகள்.. யோசனையில் பாஜக

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜகவிற்கு எதிராக ஒரே புள்ளியில் இணையும் எதிர்க்கட்சிகள்- வீடியோ

    டெல்லி: கொல்கத்தாவில் மமதா, உ.பி அரசியல் களத்தில் பிரியங்கா காந்தி, டெல்லியில் சந்திரபாபு நாயுடு என எதிர்க்கட்சிகள் போராட்டங்கள், ஒன்றிணைப்பு ஆகியவற்றை பாஜக உற்று நோக்க ஆரம்பித்திருக்கிறது. எதிர்க் கட்சிகளின் ஒற்றுமை மேலும் வலுவானால் 272 என்ற மாயாஜால எண்ணை எட்ட முடியாது என்பதை உணர்ந்த பாஜக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து யோசிக்க தொடங்கியுள்ளது.

    மத்தியில் ஆளும் பாஜகவுக்கான எதிர்ப்பு என்பது வலுகுறையாமல் எதிர்க் கட்சிகளின் போராட்டத்தால் தீவிரம் அடைந்துள்ளதை அண்மைக் கால நிகழ்வுகள் உணர்த்த தொடங்கி உள்ளன. சிபிஐயை வைத்து மேற்கு வங்கத்தில் கையை சுட்டுக்கொண்டது பாஜக அரசு. பிரதமர் மோடி ஆந்திரா சென்று திரும்பிய மறு நாளே டெல்லியில் மற்றொரு களத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டுள்ளதை ஆழமாக உற்று நோக்க ஆரம்பித்து உள்ளது.

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும், ஆந்திர மறுசீரமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி வருகிறார்.

    அந்த கோரிக்கைகளை முன்வைத்து, டெல்லியில் இன்று போராட்டம் நடத்தவுள்ளதாக சந்திரபாபு நாயுடு அறிவித்திருந்தார். அதன்படி, டெல்லியில் உள்ள ஆந்திரபவனில் இன்று காலை 8 மணிக்கு தனது உண்ணாவிரப் போராட்டத்தை அவர் தொடங்கினார்.

    அஞ்சலி செலுத்தி மரியாதை

    அஞ்சலி செலுத்தி மரியாதை

    முன்னதாக, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று சந்திரபாபு நாயுடு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, ஆந்திரபவனில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நாளை சந்தித்து சந்திரபாபுநாயுடு மனு அளிக்கவுள்ளார்.

    அஞ்சலி செலுத்தி மரியாதை

    அஞ்சலி செலுத்தி மரியாதை

    முன்னதாக, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று சந்திரபாபு நாயுடு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, ஆந்திரபவனில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நாளை சந்தித்து சந்திரபாபுநாயுடு மனு அளிக்கவுள்ளார்.

    அனைத்துக் கட்சிகள் ஆதரவு

    அனைத்துக் கட்சிகள் ஆதரவு

    இரவு 8 மணி வரை நடைபெறும் இந்தப் போராட்டத்தில், மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ, எம்பிக்கள் மற்றும் மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். சந்திரபாபு நாயுடுவின் போராட்டத்திற்கு, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

    திரண்ட முக்கிய தலைவர்கள்

    திரண்ட முக்கிய தலைவர்கள்

    ராகுல் காந்தி, தேசிய மாநாடு கட்சியின் மூத்த தலைவர் பரூக் அப்துல்லா,, சரத் யாதவ், முலாயம் சிங் யாதவ், திமுக தரப்பில் எம்பி சிவா உள்ளிட்ட பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவர்கள் போராட்ட களத்துக்கு சென்று ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக மாஜித் மேனன், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரைன் ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ஆதரவு தெரிவித்த மன்மோகன்

    ஆதரவு தெரிவித்த மன்மோகன்

    சந்திரபாபு நாயுடுவின் போராட்டத்துக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: நாடாளு மன்றத்தில் விவாதம் நடைபெற்ற போது... இந்த கோரிக்கைக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவை தெரிவித்திருந்தன. அதே ஒற்றுமையுடன் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன்.

    நிறைவேற்ற கோரிக்கை

    நிறைவேற்ற கோரிக்கை

    இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதில் மத்திய அரசு இனியும் காலதாமதம் செய்யக் கூடாது. உடனடியாக ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மன்மோகன் சிங் கூறினார்.
    கொல்கத்தாவில் மமதா, உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி, தலைநகர் டெல்லியில் சந்திரபாபு நாயுடு என தமது அரசுக்கு எதிரான அரசியல் தலைவர்கள் மைய புள்ளியில் தொடர்ந்து திரள்வதை பாஜக உற்று நோக்க ஆரம்பித்துள்ளது.

    ஒரே புள்ளியில் எதிரணி

    ஒரே புள்ளியில் எதிரணி

    தமது பிரச்சாரத்தை பலப்படுத்துவது என்பதை விட... எதிராளிகளின் ஒற்றுமையை குலைத்தால் வெற்றி எளிது என்பது அரசியலில் புதிது அல்ல. மேலும், மத்தியில் ஆளும் பாஜக அரசை முழு திடமாக எதிர்க்க தொடங்கியுள்ள இந்த போராட்ட களத்தை பாஜக உற்று நோக்க தொடங்கியுள்ளது. எதிர்க் கட்சிகள் ஒன்று திரண்டால் 272 என்ற மாயாஜால எண்ணிக்கையை எட்ட முடியாது என்பதை நன்கு உணர்ந்துள்ளது.

    பாஜக திட்டம்?

    பாஜக திட்டம்?

    அதற்கு பதிலடியாக.. பாஜகவும் அடுத்து வரக்கூடிய நாட்களில் புதிய வேகத்துடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை, பிரியங்காவின் வரவு பாஜகவுக்கு நிச்சயம் சவாலான ஒன்றாக தான் இருக்கும் என்பதை தான் அண்மைக்கால அரசியல் களங்கள் உணர்த்துகின்றன.

    English summary
    Mamata in Kolkata, Priyanka Gandhi in Uttar Pradesh, Chandrababu Naidu in Delhi , The BJP has begun to think about the next phase when the solidarity of opposition parties cannot reach the magic number of 272 if it is strong.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X