டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜக தமிழகத்திற்கு எதிரானது.. விமர்சனங்களால் மோடி அரசை காலி செய்த அதிமுக தம்பிதுரை!

பாஜக எப்போதும் தமிழகத்திற்கு எதிரான மனப்போக்கை கொண்டு செயல்பட்டு வருகிறது என்று அதிமுக எம்.பி தம்பிதுரை குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    லோக்சபாவில் பாஜகவை சீண்டிய தம்பிதுரை- வீடியோ

    டெல்லி: பாஜக எப்போதும் தமிழகத்திற்கு எதிரான மனப்போக்கை கொண்டு செயல்பட்டு வருகிறது என்று அதிமுக எம்.பி தம்பிதுரை குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.

    லோக்சபாவில் இன்று அதிமுக எம்.பி தம்பிதுரை பேசியதுதான் தேசிய அரசியலில் மிக முக்கியமான செய்தி. பாஜகவை அவர் இந்த அளவிற்கு விமர்சித்து பேசுவார் என்று அதிமுகவினர் கூட நினைக்கவில்லை.

    லோக்சபாவில் பாஜகவை கடுமையாக விமர்சித்து அதிமுக எம்.பி தம்பிதுரை பேசியது பெரிய விவாதம் ஆகி இருக்கிறது.

    நிவாரணம்

    நிவாரணம்

    எம்.பி தம்பிதுரை தனது பேச்சில், தானே தொடங்கி கஜா புயல் வரை எதற்கும் மத்திய அரசு முழு நிவாரணம் அளிக்கவில்லை. தமிழகத்திற்கு ரூ.12000 கோடியை பாஜக அரசு கொடுக்க வேண்டும். ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட மத்திய அரசு தமிழகத்திற்கு கொடுக்கவில்லை. தமிழகத்திற்கு எதிரான மனப்போக்கை மத்திய அரசு கடைபிடிக்கிறது.

    மோசமான பட்ஜெட்

    மோசமான பட்ஜெட்

    மத்திய அரசு லோக்சபா தேர்தலுக்காக மட்டும் பட்ஜெட் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் முழுக்க முழுக்க நாடகம். இது தேர்தல் அறிக்கை போல இருக்கிறது. இதையே ஏன் சென்ற வருடம் பாஜக அறிவிக்கவில்லை.

    விவசாயி பயன்

    விவசாயி பயன்

    விவசாயிகளுக்கு 6000 ரூபாய் கொடுப்பது எப்படி சரியாக இருக்கும். குறைந்த பட்சம் 12,000 ரூபாயாவது கொடுக்க வேண்டும். விவசாயிகளை இப்படி ஏமாற்றுவதற்கு ஏன் பாஜக பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். இடைக்கால பட்ஜெட் மத்திய, மாநில அரசுகளை பாதிக்கும் வகையில் உள்ளது.

    பாஜக மோசம்

    பாஜக மோசம்

    பாஜக வந்த பின் நூறு நாள் வேலை திட்டம் மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. இதை குறித்து என் ஊர் மக்களே என்னிடம் குறை கூறுகிறார்கள். ஜிஎஸ்டி வரியால் அதிகம் பாதித்தது தமிழகம்தான். தூய்மை இந்தியா திட்டம் மிக மோசமான தோல்வியை தழுவி இருக்கிறது, என்று தம்பிதுரை கடுமையான விமர்சனங்களை பாஜக மீது வைத்தார்.

    English summary
    BJP has cheated Tamilnadu and its people says AIADMK MP Thambidurai in Lok Sabha.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X