டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்.. ரூ.221 கோடியை செலவு செய்த பாஜக.. மஹுவா மொய்த்ரா எம்பி பகீர் தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலுக்காக பாஜக ரூ.340 கோடி செலவு செய்துள்ளது. இதில் உத்தர பிரதேசத்துக்கு மட்டும் ரூ.221 கோடி செலவிடப்பட்டுள்ளது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியான மஹுவா மொய்த்ரா கூறியுள்ளார்.

இந்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் 5 மாநில தேர்தல்கள் விறுவிறுப்பாக நடந்தன. பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல்கள் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடந்தன.

இந்த தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக கட்சி ஆட்சியை மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. பஞ்சாப்பில் டெல்லி மாடல் ஆட்சியை வழங்குவதாக கூறியது ஆம்ஆத்மிக்கு கைக்கொடுத்தது.

உடல்நிலை சரியில்லை.. 30 நாள் பரோல் தாங்க.. ராஜீவ் கொலை வழக்கு ராபர்ட் பயஸ் முதல்வருக்கு கடிதம்! உடல்நிலை சரியில்லை.. 30 நாள் பரோல் தாங்க.. ராஜீவ் கொலை வழக்கு ராபர்ட் பயஸ் முதல்வருக்கு கடிதம்!

4 மாநிலங்களில் பாஜக

4 மாநிலங்களில் பாஜக

இந்த 5 மாநில தேர்தல்களில் உத்தர பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றின. உத்தர பிரதேச முதல்வராக மீண்டும் யோகி ஆதித்யாத் பொறுப்பேற்றார். மேலும் இந்த 4 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இடையேயான உள்கட்சி பிரச்சனைகள் தான் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தின.

பஞ்சாப்பில் ஆம்ஆத்மி

பஞ்சாப்பில் ஆம்ஆத்மி

குறிப்பாக பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி பிரச்சனை தான் ஆம்ஆத்மிக்கு கைக்கொடுத்தது. இதனால் தான் பஞ்சாப்பில் புதிதாக ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்தது. 117 தொகுதிகள் உள்ள பஞ்சாப்பில் வெறும் 18 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. 92 இடங்களில் ஆம்ஆத்மி கட்சி வென்று ஆட்சியை பிடித்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த சரண்ஜித் சன்னி தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் மாநில தலைவராக இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவும் தோல்வியை சந்தித்தனர்.

பிரசார யூகங்கள்

பிரசார யூகங்கள்

இதுதவிர 5 மாநில தேர்தல்களிலும் பாஜகவின் தலைவர்கள் பல்வேறு பொதுக்கூட்டங்களை நடத்தினர். பேரணிகளில் பங்கேற்றனர். மேலும் குறிப்பாக பாஜகவினர் சமூக வலைதள பிரசாரங்களை சிறப்பாக கையாண்டனர். இதுதான் 5 மாநில தேர்தல்களுக்கும் கைக்கொடுத்ததாக அரசியல் நோக்கர்கள் கூறினர். அதோடு மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு குறைந்ததும் பாஜகவுக்கு பலமாக உள்ளது.

ரூ.340 கோடி செலவு

ரூ.340 கோடி செலவு

இந்நிலையில் பாஜகவினர் 5 மாநில தேர்தலுக்கும் அதிகளவில் பணம் செலவழித்துள்ளதாக மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியாக உள்ள மஹுவா மொய்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் சில விபரங்களை தெரிவித்துள்ளார். அதில், ‛‛2022ல் நடந்த 5 மாநில தேர்தல்களுக்கு பாஜக சார்பி்ல ரூ.340 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக உத்தர பிரதேசத்துக்கு மட்டும் ரூ.221 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இது அறிவிக்கப்பட்ட செலவினம். ராமராஜ்ஜியம் என்பது மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளது'' என கூறியுள்ளார்.

ராமராஜ்ஜியம் எனக்கூறியது ஏன்?

ராமராஜ்ஜியம் எனக்கூறியது ஏன்?

உத்தர பிரதேசம் மாநிலத்தில் தான் அயோத்தி உள்ளது. அங்கு புதிதாக ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதனால் உத்தர பிரதேசம் மாநிலம் ராம ஜென்ம பூமி என அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தை ராமராஜ்ஜியம் எனக்கூறி ரூ. 221 கோடி வரை பாஜக செலவு செய்துள்ளதாக மஹுவா மொய்த்ரா கூறியுள்ளார்.

English summary
BJP spent ₹340 crores in just 5 state elections in 2022 - ₹221 crs in UP alone. This is declared expenditure, Says Trinamool Congress MP Mahua Moitra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X