டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே ஆண்டில் பாஜகவின் வருமானம் 2 மடங்கும்.. காங்கிரஸின் வருமானம் 4.5 மடங்காகவும் உயர்வு

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த 2018- 2019 நிதியாண்டில் பாஜகவின் வருவாய் 2 மடங்கு உயர்ந்து 2410 கோடி ரூபாய் நிதி கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரசியல் கட்சிகள் தங்களுக்கு வரும் நன்கொடைகள் மற்றும் வருமானம் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்தில் ஒவ்வொரு நிதியாண்டு குறித்தும் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்தாக வேண்டும்.

அந்த வகையில் பாஜக, காங்கிரஸ் உள்பட பல்வேறு தேசிய கட்சிகள் பதில் மனுதாக்கல் செய்துள்ளன. அந்த வகையில் பாஜகவின் வருமானம் 2017 -2018ம் நிதியாண்டில் ரூ. 1027 கோடியாக இருந்தது. இதில் ஒரே ஆண்டில் 100 சதவீதம் அதிகரித்து 2018 -2019ம் நிதியாண்டில் பாஜக வருமானம் இருமடங்காக உயர்ந்துள்ளது. அதாவது 2410 கோடி ரூபாய் ஆக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தான் மீண்டும் அந்த தப்பை மட்டும் செய்யாது.. இம்ரான் கான் திட்டவட்டம் பாகிஸ்தான் மீண்டும் அந்த தப்பை மட்டும் செய்யாது.. இம்ரான் கான் திட்டவட்டம்

 1450 கோடி ரூபாய்

1450 கோடி ரூபாய்

இதில் தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் 1450 கோடி ரூபாய் வந்துள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது. அதேநேரம் 2017-18ம் நிதியாண்டில் தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் 210 கோடி தான் கிடைத்ததாக பாஜக தெரிவித்து இருந்தது.

32 சதவீதம் அதிகரிப்பு

32 சதவீதம் அதிகரிப்பு

கடந்த நிதியாண்டில் 1005 கோடி ரூபாய் செலவு செய்ததாக தேர்தல் ஆணையத்தில் பாஜக தெரிவித்துள்ளது.. அதற்கு முந்தைய நிதிஆண்டில் பாஜக 758 கோடி ரூபாய் செலவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த இருதகவல்களை ஒப்பிடும்போது செலவு கடந்த நிதியாண்டில் பாஜகவுக்கு 32 சதவீதம் செலவு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

 918 கோடி ரூபாய்

918 கோடி ரூபாய்

காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்த தேர்தல் செலவு கணக்கு அறிக்கையில், கடந்த 2018-2019 நிதியாண்டில் 918 கோடி ரூபாய் வருமானம் வந்ததாக குறிப்பிட்டுள்ளது. தேர்தல் செலவாக , 470 கோடி ரூபாய் ஆனதாக கூறியுள்ளது.

383 கோடி ரூபாய் நிதி

383 கோடி ரூபாய் நிதி

தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த நிதியாண்டில் 383 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளது. ஆனால் அதற்கு முந்தைய ஆண்டில் அதாவது 2017-2018ம் நிதியாண்டில் 5 கோடி ரூபாய் தான் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் கிடைத்திருக்கிறது. ஒரே ஆண்டில் பல மடங்கு உயர்ந்து உள்ளது தெரியவந்துள்ளது.

English summary
The BJP’s total income for the year 2018-19 was over Rs 2,410 crore, Congress' up 4.5 times to Rs 918 crore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X