டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

1998-ஆம் ஆண்டு முதல்.. 22 ஆண்டுகளாக அரியணைக்காக முட்டி மோதல்.. டெல்லியில் அரசியல் நெருக்கடியில் பாஜக

Google Oneindia Tamil News

Recommended Video

    Delhi assembly elections | BJP lose with small margins

    டெல்லி: டெல்லியில் 1998-ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் அமர பாஜக 22 ஆண்டுகளாக போராடி வருவதால் தற்போது மினி இந்தியா எனப்படும் டெல்லியில் அரசியல் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

    தமிழர்கள், தெலுங்கு பேசும் மக்கள், மலையாளிகள், இந்தி வாலாக்கள் என பல தரப்பட்ட மக்கள் வாழும் டெல்லியில் கடந்த முதல் முறையாக 1952-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் முதன்முதலாக ஆட்சியை பிடித்தது.

    இதைத் தொடர்ந்து 1955-ஆம் ஆண்டு மீண்டும் ஒரு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதிலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சிக்கு வந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 1956-ஆம் ஆண்டு சட்டசபை கலைக்கப்பட்டது.

    ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அந்த ஓட்டலுக்கு போறீங்களே ஏன்? ஜெயக்குமாருக்கு அப்பாவு கேள்விஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அந்த ஓட்டலுக்கு போறீங்களே ஏன்? ஜெயக்குமாருக்கு அப்பாவு கேள்வி

    சட்டசபை

    சட்டசபை

    இதன்பின்னர் டெல்லியில் 1993-ஆம் ஆண்டு மீண்டும் சட்டசபை கொண்டு வரப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது முதல்முறையாக பாஜக ஆட்சிக்கு வந்தது. முதல்வராக மதன்லால் குரானா தேர்வு செய்யப்பட்டார். இந்த பதவிக் காலத்திலேயே சாஹீப் சிங் வர்மா, சுஷ்மா ஸ்வராஜ் ஆகிய இரு முதல்வர்களை டெல்லி சந்தித்தது.

    பெருமை

    பெருமை

    1998ஆம் ஆண்டு மீண்டும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. முதல்வராக தேர்வு செய்யப்பட்ட ஷீலா தீட்சித் 2013-ஆம் ஆண்டு வரை 3 முறை முதல்வராக தொடர்ந்தார். டெல்லியில் மிக நீண்ட காலம் முதல்வராக இருந்த பெருமை அவரையே சாரும்.

    2ஆவது முறை

    2ஆவது முறை

    இந்த நிலையில் 2013-ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஊழலற்ற ஆட்சி, ஜன்லோக்பால் என்ற ஆயுதங்களை கையில் எடுத்த ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. எனினும் ஜன் லோக்பால் சட்டத்தை சட்டமன்றத்தில் இயற்ற முடியாததால் அவர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் 2015-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 2ஆவது முறையாக கெஜ்ரிவால் வெற்றி பெற்றார்.

    பாஜக வரமுடியவில்லை

    பாஜக வரமுடியவில்லை

    இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு மீண்டும் டெல்லிக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. மினி இந்தியா எனப்படும் டெல்லியில் 1998-ஆம் ஆண்டு முதல் பாஜக வெற்றியை சுவைக்கவில்லை. அதாவது 22 ஆண்டுகளாக பாஜகவால் ஆட்சிக்கு வர முடியாத சூழல் உள்ளது. 2013, 2015 ஆம் ஆண்டு வெற்றி பெறுவோம் என கருதியது. ஆனால் முடியவில்லை.

    பாஜகவுக்கு ஏமாற்றம்

    பாஜகவுக்கு ஏமாற்றம்

    கடந்த முறை 3 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக 32 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. அது போல் இந்த முறை 8 இடங்களில் வெற்றி பெற்று 38.5 சதவீத வாக்குகளை பெற்றது. இந்த முறை காங்கிரஸுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே வாக்குகள் பிரிந்து விடும் என பாஜக கருதியது. ஆனால் அது நடக்கவில்லை. சுமார் 22 ஆண்டுகளாக காத்திருந்து காத்திருந்து பாஜகவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    அரவிந்த் கெஜ்ரிவால்

    அரவிந்த் கெஜ்ரிவால்

    இதுகுறித்து பாஜக மூத்த தலைவர்கள் கூறுகையில் ஆம் ஆத்மி கூறியது சரிதான். டெல்லி எம்பி தேர்தலில் 7 தொகுதிகளிலும் பாஜக வென்றது. பொது தேர்தல்களில் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க முக்கிய காரணம், பிரதமர் நரேந்திர மோடி பிரபலமடைந்தவர் என்பதால்தான். ஆனால் அதே மாநில தேர்தல் என்னும் போது பாஜக சார்பில் அந்த மாநிலத்தில் முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்த வேண்டும். அதை பாஜக செய்யவில்லை என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதை ஒப்புக் கொள்கிறோம் என்றனர்.

    English summary
    BJP is out of power in Delhi as it faces political crisis. Finally it was on power in the year 1998.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X