டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அரசியல் செய்யாமல் சொல்லுங்கள்.. விமானப்படை தாக்குதலில் ஒருவராவது கொல்லப்பட்டாரா? காங்கிரஸ் கேள்வி!

இந்திய விமானப்படை பாகிஸ்தானில் நடத்திய தாக்குதலில் உண்மையில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பது பெரிய விவாதமாக உருவெடுத்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்திய விமானப்படை தாக்குதல் பற்றி மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி- வீடியோ

    டெல்லி: இந்திய விமானப்படை பாகிஸ்தானில் நடத்திய தாக்குதலில் உண்மையில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பது பெரிய விவாதமாக உருவெடுத்து இருக்கிறது.

    கடந்த வாரம் இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று பாலக்கோடு உட்பட நான்கு இடங்களில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் 3 அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

    ஆனால் பாகிஸ்தான் இதை மறுத்தது. பாகிஸ்தானில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் எத்தனை தீவிரவாதிகள் பலியானார்கள் என்பதுதான் தற்போது மிகப்பெரிய கேள்வியாக மாறி உள்ளது.

    35 உடல்களை பார்த்தோம்.. புகைப்படம் எடுக்க முடியவில்லை.. பாக்.கில் இந்திய தாக்குதலின் நேரடி சாட்சி! 35 உடல்களை பார்த்தோம்.. புகைப்படம் எடுக்க முடியவில்லை.. பாக்.கில் இந்திய தாக்குதலின் நேரடி சாட்சி!

    என்ன கூறியது

    என்ன கூறியது

    முதலில் வெளியான தகவலின்படி இந்த தாக்குதலில் 300 - 400 தீவிரவாதிகள் வரை பலியாகி இருக்கலாம் என்று கூறப்பட்டது. அதன்பின் நேற்று பேசிய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, இந்த தாக்குதலில் 250 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டு இருக்கலாம் என்று கூறினார். ஆனால் பாகிஸ்தான் அரசு இதை தொடர்ந்து மறுத்து வருகிறது.

    காங்கிரஸ்

    இந்த நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதுகுறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பியது. இதுகுறித்து காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி கபில் சிபல் எழுப்பியுள்ள கேள்வியில், நியூயார்க் டைம்ஸ், லண்டனின் ஜேன் இன்பர்மேஷன் குரூப், வாஷிங்டன் போஸ்ட், டெய்லி டெலிகிராப், தி கார்டியன், ராய்ட்டர்ஸ் என்று வெளிநாட்டு ஊடகங்கள் யாருமே பாகிஸ்தானில் யாருமே சாகவில்லை என்று கூறுகிறார்கள், ஆனால் நீங்கள் ஏன் மாற்றி கூறுகிறீர்கள், இந்த தாக்குதலை ஏன் அரசியலாக்க பார்க்கிறார்கள்'' என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    மனிஷ் திவாரி

    அதேபோல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மனிஷ் திவாரி இதுகுறித்து கேள்வி எழுப்பி உள்ளார். அதில், ''விமானப்படை மேஜர் ஆர்ஜிகே கபூர் கூறுகையில், இப்போதைக்கு எத்தனை பேர் இறந்தார்கள் என்று சொல்ல முடியாது. பலி எண்ணிக்கையை சரியாக கணக்கிட முடியாது, என்கிறார். ஆனால் அமித் ஷா 250 பேர் பலியாகிவிட்டதாக கூறுகிறார். இந்த விமான தாக்குதலை வைத்து அமித் ஷா அரசியல் செய்கிறார்'' என்று மனிஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

    ப.சிதம்பரம் கேள்வி

    இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் காங்கிரஸ் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ''விமானப் படையின் துணைத் தளபதி உயிர் இழந்தோர் எண்ணிக்கை பற்றி கருத்துக் கூற மறுத்து விட்டார். 300/350 பேர் உயிரிழந்தார்கள் என்ற செய்தியை யார் பரப்பியது?இந்திய குடிமகன் என்ற முறையில் என்னுடைய அரசை நான் நம்புகிறேன். ஆனால் உலகம் நம்ப வேண்டுமே? அதற்கான முயற்சியை அரசு எடுக்க வேண்டும் என்று சிலர் சொன்னதில் என்ன தவறு?, என்று கேட்டு இருக்கிறார்.

    English summary
    BJP is politicising terror attack, says Congress on IAF attack casualities in Pakistan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X