டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

5 மாநிலங்களில் படுதோல்வி எதிரொலி.. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யும் பாஜக?!

Google Oneindia Tamil News

Recommended Video

    பெரிய தோல்வியை பரிசளித்த மக்கள்... இனியாவது உணருமா பாஜக?- வீடியோ

    டெல்லி: 5 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்ததை அடுத்து விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய திட்டமிட்டுள்ளது.

    ராஜஸ்தான், மிசோரம், ம.பி., ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நிறைவடைந்தது. இதில் 3 இடங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கவுள்ளது.

    பாஜக 5 மாநிலங்களிலும் படுதோல்வி அடைந்தது. இந்த முடிவுகளால் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா என்ற சந்தேகம் பாஜகவுக்கு ஏற்பட்டுவிட்டது.

    படுதோல்வி

    படுதோல்வி

    மேலும் ஊரக பகுதிகளில் என்னதான் வீடு, கேஸ் சிலிண்டர், மானியம் என வழங்கினாலும் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை, விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்ற ஆதங்கமே படுதோல்விக்கு காரணம் என கூறப்படுகிறது.

    பேச்சுவார்த்தை

    பேச்சுவார்த்தை

    விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் டெல்லியில் விவசாயிகள், பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர், ஆனால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பிரதமருக்கு நேரமில்லை என்றனர் பாஜக நிர்வாகிகள்.

    தள்ளுபடி செய்ய

    தள்ளுபடி செய்ய

    ஆனால் அவரோ பிரியங்கா சோப்ரா திருமணத்தில் கலந்து கொண்டார். இது பெரும் விவாதப் பொருளாக மாறியது.இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு விவசாய கடன்களை தள்ளுபடி செய்யலாம் என்ற எண்ணத்தில் பாஜக வந்துவிட்டதாக தெரிகிறது.

    அதிகாரப்பூர்வ தகவல்

    அதிகாரப்பூர்வ தகவல்

    சுமார் 4 லட்சம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படலாம். இதற்கான திட்டங்களை விரைவில் மேற்கொள்ள உள்ளதாகவும், மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளன​ர். எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும் வரை எதுவும் நம்புவதற்கில்லை.

    English summary
    BJP is in thinking of to waive off farmers loan?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X