டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னமோ நடக்கப் போகுது.. நாடாளுமன்றத்திற்கு வர.. பாஜக எம்பிக்களுக்கு திடீர் கொறடா உத்தரவு...!

லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் இன்று மத்திய பாஜக எம்பிக்கள் எல்லோரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று பாஜக கொறடா சார்பாக விப் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    BJP may focus on Uniform Civil Code| இன்று தாக்கலாகிறதா பொது சிவில் சட்டம்?

    டெல்லி: லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் இன்று மத்திய பாஜக எம்பிக்கள் எல்லோரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று பாஜக கொறடா சார்பாக விப் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    இரண்டு வாரம் முன் 2020-2021ம் ஆண்டிற்கான பட்ஜெட் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் வருமான வரி அறிவிப்பு தொடர்பான முக்கியமான அறிவிப்புகள் வெளியானது.

    BJP issues whip to partys MPs ordering them to be present in LS, RS today

    இதையடுத்து தற்போது லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் இன்று மத்திய பாஜக எம்பிக்கள் எல்லோரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று விப் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பாஜக கொறடா சார்பாக விப் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    மத்திய பட்ஜெட் குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுக்க இருக்கும் விளக்க உரையை முன்னிட்டுதான் இந்த விப் நோட்டீஸ் வழங்கப்பட்டு இருக்கிறது என்று கூறுகிறார்கள். இன்று லோக்சபாவில் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் குறித்த விவாதத்திற்கு பதில் அளிக்க உள்ளார்.

    அதன்பின் ராஜ்ய சபாவில் அவர் இதேபோல் பட்ஜெட் குறித்து விவாதம் செய்ய இருக்கிறார். இந்த விவாதத்தில் நிறைய சலசலப்புகள் நடக்க உள்ளது. இதை முன்னிட்டுதான் அனைத்து எம்பிக்களும் அவையில் இருக்க வேண்டும் என்று விப் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

    அதே சமயம் இன்று டெல்லி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. டெல்லி தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் இப்படி விப் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பது நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது. மத்திய பாஜக அரசு முக்கியமான மசோதா எதையாவது கொண்டு வருகிறதா? வேறு ஏதாவது பெரிய திட்டம் இருக்கிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.

    முக்கியமாக மத்திய பாஜக அரசு பல நாட்களாக பொது சிவில் சட்டம் கொண்டு வர முயன்று வருகிறது. அந்த மசோதா இன்று தாக்கல் செய்யப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் பாஜக அரசு, மக்கள் தொகை கட்டுப்பாடு தொடர்பாக சட்டம் கொண்டு வர முயன்று வருகிறது. அந்த மசோதாவும் இன்று தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது.

    பொதுவாக பெரிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் போதுதான் இதுபோல் விப் நோட்டீஸ்கள் பிறப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    BJP issues whip to party's all MPs ordering them to be present in LS, RS today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X