டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜகவுக்கு ஷாக் கொடுத்த சத்ருகன் சின்கா.. காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

Google Oneindia Tamil News

டெல்லி: பிரபல நடிகர் சத்ருகன் சின்கா பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இன்று தன்னை இணைத்துக் கொண்டார்.

பீகார் மாநிலத்தின் பாட்னா சாகிப் (Patna sahib) தொகுதியில் பாஜக எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், பிரபல நடிகர், சத்ருகன் சின்கா. ஆனால் அத்வானியின், தீவிர ஆதரவாளரான இவர், சமீப காலமாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷாவை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார்.

BJP leader Shatrughan Sinha joins Congress

சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார் எனவே சத்ருகன் சின்கா காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாக செய்திகள் உலா வந்தன.

இதை உறுதி செய்துள்ள சத்ருகன் சின்கா, டெல்லியில் இன்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் அந்த கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து மீண்டும் இவர் பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு பெறுவார் என கூறப்படுகிறது. இந்த தொகுதியில் பாஜக சார்பில் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் போட்டியிட உள்ளார்.

72 வயதாகும் சத்ருகன் சின்கா கடந்த வாரம் டுவிட்டரில், தான் பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேரப் போவதாக அறிவித்தார்.

English summary
Rebel Bharatiya Janata Party leader and Patna Sabhi MP Shatrughan Sinha formally joined the Congress on Saturday, April 6.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X