டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ரெம்டெசிவர்".. மருந்தைப் பதுக்குகிறார் பட்னாவிஸ்.. மனிதகுலத்துக்கு எதிரானது.. பிரியங்கா பாய்ச்சல்

ரெம்டெசிவர் மருந்தை பாஜக தலைவர் பதுக்கலாமா என்று பிரியங்கா கேள்வி எழுப்பி உள்ளார்

Google Oneindia Tamil News

டெல்லி: "ரெம்டெசிவர் மருந்தை இப்படி பதுக்கி வெச்சிருக்காரே முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர், இது மனிதநேயத்துக்கு எதிரான குற்றமே" என்று பிரியங்கா காந்தி கடுமையாக சாடி உள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றின் 2வது அலை பரவி கொண்டிருக்கிறது.. இது மிகவும் பயங்கரமானது என்றும், ஆபத்தானது என்றும், வீரியமானது என்றும், பன்மடங்கு பெருகி பரவும் சக்தி படைத்தது என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருகிறார்கள். எனினும் உயிர் காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் இருப்பதால்தான் நமக்கு ஓரளவு தைரியம் பிறந்துள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய மோடி பதவி விலக வேண்டும்.. தேசிய அளவில் டிரெண்டாகும் ஹேஷ்டேக் கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய மோடி பதவி விலக வேண்டும்.. தேசிய அளவில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்

அதில் மிகுந்த நம்பிக்கையை தருவது ரெம்டெசிவிர் என்ற மருந்தாகும்.. எனினும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து உயிர்காக்கும் மருந்தாக இருப்பதால் அதை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு நேற்று முன்தினம் தடை விதித்தது.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

ஆனால், மகாராஷ்டிராவில் மட்டும் இந்த மருந்தை ஏற்றுமதி செய்வதாக ஒரு புகார் எழுந்தது.. மருந்து நிறுவனம் ஒன்று, ரெம்டெசிவிர் மருந்தை ஏற்றுமதி செய்ய போவதாக தகவல் ஒன்று வரவும், மும்பை போலீஸார் அதிரடியான நடவடிக்கையை எடுத்தனர்.. ப்ரக் பார்மா என்ற அந்த மருந்து நிறுவனத்தின் ஓனரிடம் கிடுக்கிப்பிடி விசாரணையும் நடத்தினர்.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

அப்போது, "பாஜக தலைவர்கள் கேட்டுக்கொண்டதால் தான், ரெம்டெசிவிர் மருந்தை மகாராஷ்டிராவுக்கு வழங்குகிறேன்" அந்த மருந்து கம்பெனி ஓனர் தெரிவித்தார்..இந்த விஷயம், அம்மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் காதில் எட்டியது.. உடனடியாக ஸ்டேஷனுக்கு சென்றார்.. அங்கே போலீஸாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.. அதுமட்டுமல்ல, அந்த மருந்து கம்பெனி ஓனரை விடுவிக்கவும் சொன்னார்..

மருந்து கம்பெனி ஓனர்

மருந்து கம்பெனி ஓனர்

இதுகுறித்து பட்னாவிஸ் சொல்லும்போது,"4 நாட்களுக்கு முன்பு குறிப்பிட்ட அந்த மருந்து நிறுவனத்திடம் பேசி, மகாராஷ்டிராவுக்கு ரெம்டெசிவிர் மருந்தை நாங்கள்தான் அளிக்க சொல்லி இருந்தோம்.. ஆனால், மத்திய அரசிடம் அனுமதி எதுவும் இதற்கு பெறவில்லை.. அதனால், உடனடியாக மத்திய அமைச்சர் மன்ஷுக் மாண்டவியாவிடம் பேசி, இதற்கு அனுமதி பெற்றேன். ஆனால், அதற்குள் மருந்து கம்பெனி ஓனரை போலீஸார் கைது செய்துவிட்டனர்" என்று தெரிவித்திருந்தார். பாஜக மூத்த தலைவரே போலீஸ் ஸ்டேஷன் வந்து இதற்கு விளக்கம் கூறியதையடுத்து, இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..

ட்வீட்

ட்வீட்

தற்போது இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில், இப்படிப்பட்ட சூழலில், இந்தியாவின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் மக்கள் ரெம்டெசிவிர் மருந்துக்காக அலைகிறார்கள்.. தங்களுடைய நேசத்துக்குரிய, அன்புக்குரியவர்களின் உயிரை காப்பாற்ற ஒரு குட்டி குப்பி மருந்துக்காக அல்லாடுகிறார்கள்.. போராடுகிறார்கள்.. ஆனால், பாஜகவை சேர்ந்த ஒரு மூத்த தலைவர், அதுவும் ஒரு பொறுப்புள்ள பதவியில் இருப்பவர், இந்த ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கியது மனித நேயத்துக்கு எதிரான குற்றம்" என்று பதிவிட்டுள்ளார்.

வைரல்

வைரல்

அத்துடன், மகாராஷ்டிரா பாஜக தலைவர்கள் சிலரும், தேவேந்திர பட்னாவிஸும் போலீஸ் அதிகாரிகளுடன் அந்த ஸ்டேஷனில் வாக்குவாதம் செய்யும் வீடியோவையும் பிரியங்கா தன்னுடைய ட்வீட்டில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவும், பாஜக தலைவர்களை பிரியங்கா போட்டு தாக்கிய ட்வீட்டும் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை எகிற வைத்து வருகிறது.

English summary
BJP Leaders: Priyanka gandhi tweeted about bjp leader over alleged hoarding of Remdesivir
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X