டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜார்க்கண்ட் தோல்விக்கு பின்.. இரண்டே வருடத்தில் பாஜக இழந்த மாநிலங்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: 2017 டிசம்பரில் இந்தி பேசும் பெரும்பாலபான மாநிலங்களிலும் பாஜகவே ஆட்சியில் இருந்தது. அப்போது பாஜக வசம இருந்த மாநிலங்களின் மேப்பும், இப்போது பாஜக வசம் உள்ள மாநிலங்களின் மேப்பும் வெளியாகி உள்ளது. இதில் பல மாநிலங்களை இந்த இரு வருடத்தில் பாஜக பறிகொடுத்துள்ளது.

ஜாரக்கண்ட் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜேஎம்எம் கூட்டணி 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் அங்கு பாஜகவிடம் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதன் காரணமாக பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிகை மேலும் ஒன்று குறைந்துள்ளது.

BJP loses half of states in india with in 2 years, Saffron Area on India’s Political Map Reduced

இந்தி பேசும் மாநிலங்களில் தற்போது உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், ஹிமாச்சல பிரதேசம், பீகார் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் மட்டுமே பாஜக ஆட்சியில் உள்ளது.

இறுதி வரை நம்பிய ரகுபர் தாஸ்.. படுதோல்வி.. ஜார்க்கண்ட் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமாஇறுதி வரை நம்பிய ரகுபர் தாஸ்.. படுதோல்வி.. ஜார்க்கண்ட் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா

அதேநேரம் கடந்த ஓராண்டில் சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடம் பறிகொடுத்துள்ளது. இதுதவிர இந்தி அல்லாத மாநிலமான மகாராஷ்டிராவை சிவசேனாவால் காங்கிரஸ் கூட்டணியிடம் பாஜக பறிகொடுத்துள்ளது.

இதனால் இந்தியாவில் பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களின் எண்ணிகை வெகுவாக சரிநதுள்ளது. இந்தி பேசும் மாநிலங்களால் மத்தியில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை மிகப்பெரிய பெரும்பான்மையுடன் தக்கவைத்த போதும் , இந்தி பேசும் ஒவ்வாரு மாநிலமாக தற்போது இழந்து வருவது அந்த கட்சிக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகே பார்க்கப்படுகிறது.

English summary
BJP loses half of Hindi heartland, Saffron Area on India’s Political Map Reduced to Half in Less Than 2 Years
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X