டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராமர் கோவில், விவசாயிகளுக்கு பென்சன்.. 75 வாக்குறுதிகளோடு பாஜக தேர்தல் அறிக்கை !

Google Oneindia Tamil News

Recommended Video

    BJP Manifesto: இன்று வெளியாகும் பாஜக தேர்தல் அறிக்கை- வீடியோ

    டெல்லி: பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வெளியிட்டுள்ளார்.

    காங்கிரஸ் கட்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருந்தது. அதில் ஏழை குடும்பங்களுக்கு மாதம் ரூ.6000 என்ற ரீதியில் வருடத்துக்கு 72 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயத்துக்கு தனி பட்ஜெட் என பல கவர்ச்சி வாக்குறுதிகளை வெளியிட்டது.

    இந்நிலையில் நேற்று பாஜகவின் தேர்தல் பிரச்சார பாடலை டெல்லியில் நேற்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி வெளியிட்டார்.

    பாஜக சாதனைகள்

    பாஜக சாதனைகள்

    அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் சில கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையை நம்பியே தேர்தல் களத்தில் நிற்கின்றன. ஆனால் நாங்கள் கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனையை நம்பி வாக்கு கேட்கப்போகிறோம்.

    வறுமை

    வறுமை

    வறுமையை ஒழிப்பதாக 1951ம் ஆண்டு முதல் கூறிவரும் காங்கிரஸ் 70 வருடங்களை கடந்த பின்பும் இப்போது அதை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு வருகிறது. கடந்த 70 வருடங்களாக நாட்டில் காங்கிரஸ் வறுமையை ஒழிக்கவில்லை. ஆனால் நாங்கள் ஏழை மக்களை முன்னேற்ற பாடுபட்டு வருகிறோம்.

    ஜிஎஸ்டி குறைப்பு

    ஜிஎஸ்டி குறைப்பு

    நடுத்தர வருவாய் குடும்பத்தினருக்கு வருமான வரி சலுகை அளித்துள்ளோம். ஜிஎஸ்டியை குறைத்துவிட்டோம். இந்திய நடுத்தர மக்கள் முனனேற்றம் சர்வதேச பொருளாதாரத்தில் நிச்சயம் வருங்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். நடுத்தர மக்களுக்காக நாங்கள் செய்ததை போல் காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. அவர்களின் அறிக்கையில் நடுத்தர மக்களுக்காக என்ன இருக்கிறது.

    தொங்கு நாடாளுன்றம்

    தொங்கு நாடாளுன்றம்

    மத்தியில் தொங்கு நாடாளுமன்றம் அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஆசைப்படுகின்றன. ஒரு கேப்டன் நாட்டை ஆள வேண்டுமா, அல்லது 40 கேப்டன்கள் நாட்டை ஆள வேண்டுமா என்பதை மக்களே முடிவு செய்து கொள்ளட்டும்.

    பாஜக மீண்டும் ஆட்சி

    பாஜக மீண்டும் ஆட்சி

    2014ம் ஆண்டு நடந்த தேர்தலைப்போல் இந்த தேர்தலிலும் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும். அதற்கு முன்னோட்டமான தேர்தல் அறிக்கை இன்று (திங்கள்கிழமை) வெளியிடப்படும்" என்றார்.

    பாஜக தேர்தல் அறிக்கை

    இன்று மதியம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாஜகவின் 45 பக்கம் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் ராமர் கோவில் கட்டப்படும். விவசாயிகளுக்கு பென்சன் வழங்கப்படும். விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு ஆக்கப்படும், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட 75 வாக்குறுதிகள் உள்ளன.

    English summary
    BJP manifesto 2019 released by rajnath singh, they give 75 promises include ramar temple, farmers pension
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X