டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல்.. இன்று ரிலீஸாகிறது?

Google Oneindia Tamil News

டெல்லி: பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் ஜனநாயகத்தன் மனசாட்சியான தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது. அடுத்த மாதம் 11 ம் தேதி தொடங்கும் முதல் கட்ட தேர்தல் மே மாதம் 19 ம் தேதி 7ம் கட்ட தேர்தலோடு முடிவுக்கு வரும் அதன் பின்னர் அதே மாதம் 23 ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவரும்.

 BJP may release its first list of Candidates today

இதற்கான பணிகளில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக உள்ளன. தமிழகத்தில் இரு கம்யுனிஸ்ட் கட்சிகளும் தங்களது வேட்பாளர்கள் யார் யார் என்பதை அறிவித்துவிட்டனர். காங்கிரஸ் கட்சியும் தங்களது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டது. உ.பி.யில் காங்கிரஸ் தலைவர் ராகுலும், சோனியா காநிதியும் போட்டியிட உள்ளனர்.

வேட்பு மனு தாக்கல்.. வேட்பாளருடன் 4 பேருக்கு மட்டுமே அனுமதி.. தலைமை தேர்தல் அதிகாரி கண்டிப்பு வேட்பு மனு தாக்கல்.. வேட்பாளருடன் 4 பேருக்கு மட்டுமே அனுமதி.. தலைமை தேர்தல் அதிகாரி கண்டிப்பு

இந்நிலையில் பாஜக தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்ட தேர்தல் உத்திரப்பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா, பிகார், ஓடிஸா, மேற்குவங்கம், அசாம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் மாதம் 25 ம் தேதியோடு நிறைவு பெறுகிறது. இதனால் முதற்கட்ட தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் உள்ள தொகுதிகளுக்கு கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

அந்த வகையில் பாஜக இன்று தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளது என டெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பாஜகவின் முக்கியத்தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் உட்பட மூத்த தலைவர்கள் கலந்துகொள்ள உள்ள இந்த கூட்டத்தில் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்படுகிறது.

அதன் பின்னர் முதல் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள 91 தொகுதிகளில் பாஜக போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படவுள்ளது. அதன் பின்னர் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள தமிழகத்தில் பாஜக சார்பில் சிவகங்கை தொகுதியில் எச் ராஜா போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

English summary
BJP is all set to release its first list of Candidates for LS elections today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X