டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பார்த்து மேடம்.. மெதுவா பெருக்குங்க.. குப்பைக்கு வலிக்கப் போகுது.. வைரலாகும் ஹேமமாலினி!

Google Oneindia Tamil News

Recommended Video

    வைரலாகும் ஹேமமாலினி பாராளுமன்ற வளாகத்தில் சுத்தம் செய்யும் வீடியோ

    டெல்லி: நாடாளுமன்றத்தில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூரும் மதுரா எம்பி ஹேமமாலினியும் இணைந்து வளாகத்தை சுத்தம் செய்தனர். அப்போது ஹேமமாலினி குப்பைக்கு கூட வலிக்காதபடி அவர் பெருக்கியது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

    தூய்மை இந்தியா திட்டத்தை கடந்த 2014-ஆம் ஆண்டு காந்தியின் அக்டோபர் 2-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டமானது சாலைகளை சுத்தப்படுத்துவதற்காக தொடங்கப்பட்டதாகும்.

    மேலும் இந்தியாவில் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லாத நாடாக்குதல், அனைத்து வீடுகளிலும்,

    2 குடிகாரர்கள்.. நடு ரோட்டில் திடீரென படுத்து.. தட்டி எழுப்பி விசாரிச்சா.. அடக் கொடுமையே 2 குடிகாரர்கள்.. நடு ரோட்டில் திடீரென படுத்து.. தட்டி எழுப்பி விசாரிச்சா.. அடக் கொடுமையே

    பிறந்தநாள் விழா

    பிறந்தநாள் விழா

    இது ஒரு தனி அமைப்பாக செயல்பட்டு வருகிறது. பாஜகவினரும் இந்த திட்டத்தை முன்னிலைப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஆண்டு மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

    தூய்மை இந்தியா

    தூய்மை இந்தியா

    இந்த நாளையொட்டி அனைத்து எம்பிக்களும் தங்கள் தொகுதியில் 150 கி.மீ. தொலைவை நிறைவு செய்யும் வகையில் பாத யாத்திரை செல்ல வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில் இன்றைய தினம் நாடாளுமன்ற வளாகத்தில் தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டது.

    மதுரா எம்பி

    மதுரா எம்பி

    இந்த திட்டத்தில் மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூரும், எம்பி ஹேமமாலினியும் பங்கேற்றனர். இதில் அனுராக் தாக்கூரை பார்க்கும் போது உண்மையில் அவர் தூய்மை இந்தியா திட்டத்தை உள்வாங்கிக் கொண்டு ஆத்மார்த்தமாக செய்வது போல் இருந்தது.

    குப்பைக்கு வலிக்கும்

    ஆனால் ஹேமமாலினியோ ஒரு கூலிங் கிளாஸை போட்டு அவர் பிடித்திருந்த துடைப்பத்தின் நுனி கூட தரையை தொடவில்லை. அந்த அளவுக்கு அலட்டிக் கொண்டு பெருக்குவதற்கு போஸ் கொடுத்தார். இவர் பெருக்குவதை பார்க்கும் போது ஏதோ அழுத்தமாக பெருக்கினால் குப்பைக்கு வலிக்கும் என்பதால் மெதுவாக பெருக்குவது போல் இருந்தது.

    ஹேமமாலினி

    இதற்கு நெட்டிசன்கள் ஏபிசிடி படத்தின் வீடியோவை போட்டு கலாய்த்துள்ளனர். அதில் வடிவேல் பஸ் கன்டக்டராக இருப்பார். அப்போது பிரேக் டவுன் ஆன பஸ்ஸை இறங்கி தள்ளுவதற்காக பயணிகள் இறங்கி அனைவரும் தீவிரமாக தள்ளி கொண்டிருப்பர். ஆனால் ஒருவர் மட்டும் பஸ்ஸை தள்ளாமல் சும்மா வெறும் கைகளால் தள்ளுவது போல் ஆக்ஷன் காண்பித்து கொண்டிருப்பார். இதை வடிவேல் பார்த்துவிட்டு அவரை கலாய்ப்பார். அது போல் உள்ளது ஹேமமாலினியின் தூய்மை இந்தியா.

    English summary
    Delhi: BJP MPs including Minister of State (Finance) Anurag Thakur and Hema Malini take part in 'Swachh Bharat Abhiyan' in Parliament premises.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X