டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தீயாய் பரவும் வீடியோ... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்பி.. சாமியார் பிரக்யா சிங் தாக்கூர்!

Google Oneindia Tamil News

Recommended Video

    சு.சுவாமி திடுக் ட்வீட் | மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்பி- வீடியோ

    டெல்லி: பாஜகவின் லோக்சபா எம்பியும் பெண் சாமியாருமான பிரக்யா சிங் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருப்பது பாஜகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பெண் சாமியாரான பிரக்யா சிங் தாக்கூர் லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் போட்டியிட்டார். ஏற்கனவே மாலேகான் குண்டுவெடிப்பு, மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகி சுனில் ஜோஷி படுகொலை ஆகிய வழக்குகளில் தொடர்புடையவர் பிரக்யா சிங் தாக்கூர்.

    போபால் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங்கை எதிர்த்து போட்டியிட்டார். இதில் மூன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திக் விஜய்சிங்கை வீழ்த்து வெற்றி பெற்று பாஜகவின் லோக்சபா எம்பியாகியுள்ளார்.

    கார்த்திக்கு சீட்டு கொடுக்காவிட்டால்.. நான் இதை செய்வேன்.. சோனியாவையே மிரட்டி சாதித்த ப.சிதம்பரம் கார்த்திக்கு சீட்டு கொடுக்காவிட்டால்.. நான் இதை செய்வேன்.. சோனியாவையே மிரட்டி சாதித்த ப.சிதம்பரம்

    பிரச்சாரத்துக்கு தடை

    பிரச்சாரத்துக்கு தடை

    இவர் தேர்தலின் போது பல சர்ச்சைகளில் சிக்கினார். இவரது பிரச்சாரம் சர்ச்சையை கிளப்பவே, பிரக்யா சிங் தாக்கூர் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் 72 மணி நேரம் தடை விதித்தது.

    தேசபக்தர்

    தேசபக்தர்

    அதோடு மட்டுமின்றி நாதுராம் கோட்சேவை ஒரு இந்து தீவிரவாதி என நடிகர் கமல்ஹாசன் கூற, அவருக்கு பதிலளிக்கும் வகையில் மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்று கூறினார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    மன்னிப்பு

    மன்னிப்பு

    பிரக்யா சிங்கின் இந்த பேச்சுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார். பிரக்யா சிங் பேசியதை மன்னிக்கவே முடியாது என்று காட்டமாக கூறினார் மோடி. இதைத்தொடர்ந்து பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரக்யா சிங்.

    மீண்டும் சர்ச்சை

    மீண்டும் சர்ச்சை

    வாயை திறந்தாலே பிரச்சனையாவதை உணர்ந்த பிரக்யா சிங் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்திற்கு பின்பு மூன்று நாட்கள் மவுன விரதமும் கடுமையான தியானமும் மேற்கொண்டார். இந்நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிரக்யா சிங்.

    போட்டோவுக்கு போஸ்

    போட்டோவுக்கு போஸ்

    அதாவது பிரக்யா சிங் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில் மக்கள் அதிகம் வந்து செல்லும் மால் போன்ற இடத்தில் பொதுமக்கள் சிலருக்காக காவி உடையில் போட்டோவுக்கு அழகாக நின்றபடி போஸ் கொடுக்கிறார் பிரக்யா சிங்.

    வீல்சேர்

    போட்டோ எடுத்து முடித்த பின்பு சிரித்து பேசியபடி சாதாரணமாக நடந்து சென்று அங்கு அவரது உதவியாளர்கள் வைத்துள்ள வீல் சேரில் அமர்ந்துகொள்கிறார். அவரது காலை பிடித்து உதவியாளர்கள் வீல் சேரின் ஃபூட்ரெஸ்ட்டில் வைக்கின்றனர். இந்த வீடியோதான் தற்போது வைரலாகியுள்ளது.

    யாரை ஏமாற்ற?

    யாரை ஏமாற்ற?

    நன்றாக நடந்து செல்லும் பிரக்யா சிங்குக்கு வீல் சேர் தேவை ஏன்? யாரை ஏமாற்ற இதுபோன்று வீல் சேர் பயன்படுத்துகிறார் என்றும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுந்துள்ளது. இதனால் பாஜக எம்பி பிரக்யா சிங்குக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    English summary
    BJP MP Pragya Singh again in a issue. She is using Wheel chair while walking properly. That video became viral on Social media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X