டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆரம்பிச்சிட்டாங்கல்ல.. பாஜக தோல்விக்கு காரணம் மோடியின் இந்த மாற்றம்தான்.. பாஜக எம்.பி கலகக்குரல்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஓய்ந்தது மோடி அலை... கலக்கத்தில் பாஜக!- வீடியோ

    டெல்லி: சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியடைய அக்கட்சியின் சமீப கால நடவடிக்கைகள் சிலவற்றை பட்டியலிட்டு காரணமாக கூறியுள்ளார் பாஜக ராஜ்யசபா எம்.பி.சஞ்சய் கக்கடே.

    ஐந்து மாநில தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பிரதேசத்தில் கூட காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றி வெற்றி வாகை சூடியுள்ளது.

    தேர்தல் தோல்வி குறித்து, கருத்து தெரிவிக்க பாஜக தலைவர்கள் பலரும் ஜகா வாங்கியபடி உள்ளனர்.

    ராஜ்யசபா எம்.பி

    ராஜ்யசபா எம்.பி

    இந்த நிலையில், தேர்தல் ரிசல்ட் பற்றி எம்.பி. சஞ்சய் கக்கடே கூறுகையில், ராஜஸ்தானிலும், சட்டீஸ்கரிலும் பாஜக தோற்கும் என்று எனக்கு தெரியும். மத்திய பிரதேசம்தான் ஆச்சரியமான முடிவாக அமைந்துள்ளது. 2014ம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்தபோது வளர்ச்சி பற்றி பேசினார்.

    சிலை வைப்பது

    சிலை வைப்பது

    ஆனால், பிறகு அதை நாம் மறந்துவிட்டோம் என்று நினைக்கிறேன். ராமர் கோயில், சிலைகள் வைப்பது மற்றும் இடங்களுக்கு பெயர்களை மாற்றுவது முக்கிய குறிக்கோளாகிவிட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    சர்ச்சை கருத்துக்கள்

    சர்ச்சை கருத்துக்கள்

    புனேயை சேர்ந்த சஞ்சய் கக்கடே பில்டராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர். பாஜக தேர்தல் ரிசல்ட் குறித்து பொட்டில் அடித்தாற்போல கருத்து சொல்வது இவருக்கு புதிது கிடையாது. 2017ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவின்போதே, பாஜகவால் அறுதி பெரும்பான்மையை பிடிக்க முடியாது என கூறியவர் இவர்.

    குஜராத் நிலைமை

    குஜராத் நிலைமை

    அதேபோலத்தான், குஜராத்தில் மிக நெருக்கமான போட்டியில் பாஜக ஆட்சியை பிடித்தது. பிரதமர் மோடி கடைசி நேர பிரச்சாரம், கண்ணீர் போன்றவை கடைசி நேரத்தில் குஜராத்தை பாஜக தக்க வைக்க காரணமாக இருந்தது நினைவிருக்கலாம்.

    English summary
    BJP Rajya Sabha MP Sanjay Kakade has hinted that his party’s focus on building the Ram Mandir at Ayodhya and statues along with changing names of places had contributed to the party’s poor showing in the Assembly elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X