டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வங்கிக் கணக்கில் ரூ 15 லட்சம் போடுவதாக நாங்கள் எப்ப சொன்னோம்.. ராஜ்நாத் சிங் ஷாக் பரபரப்பு பேட்டி

Google Oneindia Tamil News

டெல்லி: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வங்கிக் கணக்கில் ரூ 15 லட்சம் போடுவதாக நாங்கள் எப்போது கூறினோம் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ 15 லட்சத்தை செலுத்துவோம் என்று கூறியிருந்தனர்.

ஆனால் இந்த 5 ஆண்டுகளில் கருப்பு பணத்தை மீட்கவும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ரூ 15 லட்சமும் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

சுயேச்சைகள்.. எதிரிகளின் ஆதரவையும் ஏற்றுக்கொள்வோம்.. மோடி யூ-டர்ன்.. தொங்கு லோக்சபா உருவாகிறதா? சுயேச்சைகள்.. எதிரிகளின் ஆதரவையும் ஏற்றுக்கொள்வோம்.. மோடி யூ-டர்ன்.. தொங்கு லோக்சபா உருவாகிறதா?

செய்தி நிறுவனம்

செய்தி நிறுவனம்

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எல்லா மாநிலங்களிலும் எதிர்க்கட்சியினர் முன் வைக்கும் குற்றச்சாட்டு ரூ 15 லட்சம் யார் கணக்கிலாவது வரவு வைக்கப்பட்டதா என்பதுதான். இந்த நிலையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.

நடவடிக்கை

நடவடிக்கை

அதில் அவர் கூறுகையில் ரூ15 லட்சத்தை வங்கிக் கணக்கில் போடுவோம் என பாஜக கூறவே இல்லை. கருப்பு பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என நாங்கள் கூறியிருந்தோம்.

அரசியல் உள்நோக்கம்

அரசியல் உள்நோக்கம்

கருப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கருப்பு பணத்தை மீட்க சிறப்பு புலனாய்வு குழுவினரை அமைத்துள்ளோம். வருமான வரித் துறை, அமலாக்கத் துறை சோதனைகளின் பின்புலத்தில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை.

காஷ்மீருக்கு தனி பிரதமரா?

காஷ்மீருக்கு தனி பிரதமரா?

வருமான வரித் துறை, அமலாக்கத் துறை ஆகியன தனித்து இயங்கும் அமைப்புகள். அவைகளுக்கு தேர்தல் நடத்தை விதிகள் பொருந்தாது. அவர்களுக்கு கிடைத்த தகவலை வைத்து நடவடிக்கை எடுக்கிறார்கள். அதை எப்படி நம்மால் நிறுத்த முடியும்? காஷ்மீருக்கு தனி பிரதமர் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

English summary
Union minister Rajnath Singh has said that the BJP never made promises of transferring Rs 15 lakh into people's bank accounts during the campaign for Lok Sabha elections in 2014.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X