டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா வைரஸால் போராட்டங்களுக்கு 1 மாதம் லீவ் விட்டது பாஜக

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸ் தாக்குதலால் அடுத்த 1 மாதத்துக்கு எந்த ஒரு போராட்டமும் நடத்தப் போவது இல்லை என்று பாஜக அறிவித்துள்ளது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் உக்கிரமாக இருந்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

BJP Not To Hold Any Protests For 1 Month, says JP Nadda

நாடு முழுவதும் கொரோனாவை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது.

அரசியல் கட்சிகளும் நிகழ்ச்சிகளை சில வாரங்களுக்கு ஒத்தி வைத்திருக்கின்றன. இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி, அடுத்து 1 மாத காலத்துக்கு போராட்டங்கள் அனைத்தையும் ஒத்திவைப்பதாக பாஜக அறிவித்துள்ளது.

1.8 லட்சம் பயணிகளுக்கு கொரோனா சோதனை.. சிறப்பு கிளீனிக்.. 4 மையங்கள்.. அமைச்சர் விஜயபாஸ்கர் செம! 1.8 லட்சம் பயணிகளுக்கு கொரோனா சோதனை.. சிறப்பு கிளீனிக்.. 4 மையங்கள்.. அமைச்சர் விஜயபாஸ்கர் செம!

இது தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா கூறுகையில், பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. அனைத்துவிதமான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை அடுத்த 1 மாதத்துக்கு ஒத்திவைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

English summary
The BJP has decided not to hold any protest or demonstration for a month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X